TV என்பது அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறி வெகு காலம் ஆகிவிட்டது.
எப்பொழுது டி.வியில் சீரியல்கள் ஒளிப்பரப்பத் தொடங்கினார்களோ அன்று முதல்
இன்று வரை டி.வி. இல்லாமல் எந்த ஒரு வீட்டுப் பெண்மணியும் இருந்ததில்லை..
அவ்வாறு வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த டிவியால் வீட்டில் சில சமயம்
பிரச்னையும் ஏற்படுவதுண்டு. ஒருவருக்கு பிடித்தமான சேனலை
பார்த்துக்கொண்டிருக்கம்போது, மற்றவருக்கு அது பிடிக்காமல் போய் சேனல்
மாற்றம் செய்வார்கள்.
இதானல் வீட்டில் ஒரு பெரிய ரணகளமே ஏற்பட்ட நிகழ்வுகளும் உண்டு. இனி
அதுபோன்று பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பளிக்காமல் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை
கண்டுபிடித்துள்ளனர்.
ஒரே சமயத்தில் ஒரு டீ.வி. யின்
மூலம் இரண்டு சேனல்களைக் காணும் வசதிதான் அது.
எந்தெந்த சேனலை காண வேண்டுமோ அந்த அந்தந்த சேனலை தேர்வு செய்துவிட்டு
அதற்கான கண்ணாடியை (Special Glasses) அணிந்துகொண்டாலே போதும். அதில் audio
Buds ம் இணைந்திருப்பதால் அவரவர்கள் விரும்பிய சேனலை ஆடியோவுடன் பார்த்து
மகிழலாம்.
OLED வகை Screen கள் கொண்ட டிவிக்கள் இதுபோன்ற வசதிகளைக் கொடுக்கின்றன.
சமீபத்தல் Samsung நிறுவனம் 55 அங்குல திரையகலம் கொண்ட OLED டிவி ஒன்றினை
அறிமுகம் செய்தது. இந்த ஓ.எல்.டி திரையினைக் கொண்ட டிவிக்கள் LED வகை
திரைகளைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு துரிதமாக, துல்லியமாக படங்களைக்
காட்டும் ஆற்றலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சிறப்புமிக்க டிவியின் விலை 15,000 டாலராகும். தற்போதைய இந்திய ரூபாய்
மதிப்பிற்கு 924,742/-
LG நிறுவனத்தாரும் இதுபோன்றதொரு டிவியை வெளியிட்டுள்ளனர்.
ஆங்கிலத்தில்:
Samsung unveiled a TV which lets householders watch two different
high-definition shows on the same screen at the same time, each with its
own audio track.
The new 55-inch OLED TV uses special glasses, similar to the glasses
required for 3D TVs, that separate the two shows from each other. The
glasses also have earbuds attached for individual audio.
அந்த டி.வியில் இதுபோன்ற ஒரே நேரத்தில் ஒரு டிவியில் இரண்டு
தொலைக்காட்சிகளைப் பார்க்கும் வசதிகள் அடங்கியுள்ளன.
No comments:
Post a Comment