Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Thursday, December 12, 2013

கம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்” விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


நாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிக பல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஆய்வு நடத்தினார்கள்.



அவர்கள் புதிய “சிப்” ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் கம்ப்யூட்டரை அதிவேகமாக செயல்பட வைக்க முடியும். பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள பிராசசர் மைக்ரோ “சிப்”பில் பொதுவாக 2 அல்லது 4 பாகங்கள் இருக்கும் சில “சிப்”களில் 16 பாகங்கள் வரை இருக்கும்.


இப்போது விஞ்ஞானி கள் உருவாக்கியுள்ள மைக்ரோ “சிப்”பில் 1000 பாகங்களை உருவாக்க முடியும். இதனால் இந்த கம்ப்யூட்டர் தற்போதைய கம்ப்யூட்டரைவிட 20 மடங்கு வேகமாக வேலை செய்யும். இது பெர்சனல் கம்ப்யூட்ட ராக இருந்தாலும் அதிநவீன கம்ப்யூட்டரை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும்.


இந்த கம்யூட்டர் இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Monday, December 9, 2013

ஒரே சமயத்தில் இரண்டு சேனல்களை டிவியில் பார்க்கும் தொழில்நுட்பம்


TV என்பது அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறி வெகு காலம் ஆகிவிட்டது. எப்பொழுது டி.வியில் சீரியல்கள் ஒளிப்பரப்பத் தொடங்கினார்களோ அன்று முதல் இன்று வரை டி.வி. இல்லாமல் எந்த ஒரு வீட்டுப் பெண்மணியும் இருந்ததில்லை..
அவ்வாறு வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த டிவியால் வீட்டில் சில சமயம் பிரச்னையும் ஏற்படுவதுண்டு. ஒருவருக்கு பிடித்தமான சேனலை பார்த்துக்கொண்டிருக்கம்போது, மற்றவருக்கு அது பிடிக்காமல் போய் சேனல் மாற்றம் செய்வார்கள். 
இதானல் வீட்டில் ஒரு பெரிய ரணகளமே ஏற்பட்ட  நிகழ்வுகளும் உண்டு. இனி அதுபோன்று பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பளிக்காமல் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். 
Samsung-55-inch-OLED-TV-with-dual-view-options


ஒரே சமயத்தில் ஒரு டீ.வி. யின் மூலம் இரண்டு சேனல்களைக் காணும் வசதிதான் அது. 

எந்தெந்த சேனலை காண வேண்டுமோ அந்த அந்தந்த சேனலை தேர்வு செய்துவிட்டு அதற்கான கண்ணாடியை (Special Glasses) அணிந்துகொண்டாலே போதும். அதில் audio Buds ம் இணைந்திருப்பதால் அவரவர்கள் விரும்பிய சேனலை ஆடியோவுடன் பார்த்து மகிழலாம். 
OLED வகை Screen கள் கொண்ட டிவிக்கள் இதுபோன்ற வசதிகளைக் கொடுக்கின்றன. சமீபத்தல் Samsung நிறுவனம் 55 அங்குல திரையகலம் கொண்ட OLED டிவி ஒன்றினை அறிமுகம் செய்தது. இந்த ஓ.எல்.டி திரையினைக் கொண்ட டிவிக்கள் LED வகை திரைகளைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு துரிதமாக, துல்லியமாக படங்களைக் காட்டும் ஆற்றலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சிறப்புமிக்க டிவியின் விலை 15,000 டாலராகும். தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பிற்கு 924,742/-
LG நிறுவனத்தாரும் இதுபோன்றதொரு டிவியை வெளியிட்டுள்ளனர்.
ஆங்கிலத்தில்: 
Samsung unveiled a TV which lets householders watch two different high-definition shows on the same screen at the same time, each with its own audio track.
The new 55-inch OLED TV uses special glasses, similar to the glasses required for 3D TVs, that separate the two shows from each other. The glasses also have earbuds attached for individual audio.
அந்த டி.வியில் இதுபோன்ற ஒரே நேரத்தில் ஒரு டிவியில் இரண்டு தொலைக்காட்சிகளைப் பார்க்கும் வசதிகள் அடங்கியுள்ளன.

Sunday, December 8, 2013

இலவசமாக MMS அனுப்பலாம் வாங்க.

இலவசமாக MMS அனுப்பலாம் வாங்க.


ஆம் இன்று உங்களுக்கு பெறுமதிவாய்ந்த பதிவு ஒன்றை கொண்டு வந்துள்ளேன். ஏனென்றால் இன்று அதிகமானோர் பயன்படுத்துவது Smart Phone தான். அதனாலே இலவசமாக MMS அணுப்புவத்ற்கான வாய்ப்பு இதோ. இது எமது இலங்கையால் அமைக்கப்பட்டுள்ளது. கீலுள்ள Link மூலம் சென்று இலவசமாக MMS அனுப்பிக் கொள்ளுங்கள்.

* இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.