Monday, December 9, 2013

கண்களை காக்க புதிய மென்பொருள்..!


கணினி பயனர்களுக்கு, கணினியின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட கோடி மடங்கு முக்கியமானது உடல் நலன் பேணுவது. குறிப்பாக இரவும் பகலும் கணினியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்களுக்கு அதிக பாதுக்காப்பு கொடுக்க வேண்டியது முக்கியம். 
பல் போனால் சொல்  போச்சு என்பார்கள்.. கண் போனால் இந்த உலகமே போய்விடும்.மாறி மாறி வரும் வெளிச்சத்தையும், கம்ப்யூட்டர் மானிட்டரிலிருந்து  வரும் அதிகளவு ஒளியையும் கண்கள் பார்த்துக்கொண்டே இருப்பதால் விரைவிலே சோர்வடைந்துவிடும். 
சோர்வடைந்த கண்களுக்கு ஓய்வு அளிப்பது முக்கியம். அதை 20-20 பார்முலா என்பார்கள். இதைப் பற்றி பெரும்பாலும் அறிந்திருப்பீர்கள்.
automatic-monitor-light-changing-software-for-pc-users-eye-protection


இவ்வாறு கண்களுக்கு ஓய்வளித்தாலும்,மானிட்டரின் ஒளியை மாற்றி அமைப்பதன் மூலம் கண்களைப் பாதுகாத்திட முடியும். 
உதாரணமாக பகல் நேரத்தில் மானிட்டர் திரையின் வெளிச்சம் குறைவாக இருக்கும். அதே இரவு நேரத்தில் மானிட்டர் வெளிச்சம் அதிகமாக இருக்கும். இது கண்களை கண்டிப்பாக பாதிப்புக்கு உள்ளாக்கும். பெரும்பாலானவர்கள் மானிட்டர் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் ஒரே அளவிலேயே மாற்றமல் வைத்திருப்போம். 
அவ்வாறு மாற்ற நினைத்தாலும் ஒவ்வொரு முறையும் பகலிலும், இரவிலும் மானிட்டர் திரை வெளிச்சத்தை மாற்றி மாற்றி அமைத்துக்கொண்டிருக்க முடியாது.
தானாகவே மானிட்டர் வெளிச்சம் பகலிலும் இரவிலும் மாற்றிக்கொள்ளக்கூடிய வசதி இருந்தால் கண்களுக்கும் நல்லது. காட்சியும் சிறப்பாக அமையும். இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுக்கிறது எப்லக்ஸ் என்ற  மென்பொருள். 
இம்மென்பொருள் நீங்கள் பகல் நேரத்தில் பணிபுரிந்தால், அதற்கேற்ற வெளிச்சத்தையும், இரவு நேரத்தில் பணிபுரிந்தால் அதற்கேற்ற வெளிச்சத்தையும் மாற்றிக் கொடுக்கும். வெளிச்ச அமைவை நீங்களே தீர்மானிக்கலாம். அதற்கான வசதியும் இதில் உள்ளது. 

மென்பொருளைப் பயன்படுத்தும் முறை: 

முதலில் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். 
1. Change Setteings  செல்லவும்.
2. Adjust Your Lighting For Day And Night: பகல் மற்றும் இரவில் எந்தளவிற்கு மானிட்டரில் வெளிச்சம் வேண்டும் என்பதைத் தெரிந்தெடுக்கவும்.
3. Set Your Location: இதில் Change என்பதை அழுத்தி, தோன்றும் மேப்பில் உங்களுடைய ஊரை தேர்ந்தெடுங்கள். அல்லது மேலிருக்கும் கட்டத்தில் உங்களுடைய பகுதியின் பெயரை டைப் செய்யுங்கள். 
4. Transition Speed: இந்த வசதியானது மானிட்டரின் வெளிச்சம் மாறும் நேரத்தை சிறிது சிறிதாக கூட்டுவதற்குப் பயன்படுகிறது. (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மானிட்டரின் வெளிச்சம் திடீரென மாறுவதால் நீங்கள் குழப்பமடைவதை தவிர்க்கவும், கண்களுக்கு ஏற்றவாறு சிறிது சிறுதாக மானிட்டர் வெளிச்சம் குறையச் செய்வதற்கும், அதிகரிக்கச் செய்வதற்கு இந்த வசதி பயன்படும். இதில் உங்களுக்கு ஏற்றவாறு வெளிச்சம் மாறும் நேரத்தை மாற்றி அமைக்கலாம் )
விண்டோஸ் கணினிகளுக்கு மட்டுமல்லாமல், லினக்ஸ், மேக் கணனிகளுக்கும் இந்த மென்பொருள் பதிப்பு உள்ளது. எனவே அனைத்து கணினிப் பயனர்களும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். 
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: Download eye protection from monitor software 
கண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ள ஒரு இரண்டு நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு வழக்கமான வேலைகளைச் செய்துபாருங்கள்...! கண்டிப்பாக கண்களின் அருமை உங்களுக்குத் தெரியும்.

No comments:

Post a Comment