Showing posts with label சுவாரஸ்யம். Show all posts
Showing posts with label சுவாரஸ்யம். Show all posts

Thursday, December 12, 2013

உங்கள் நண்பர்களை SMS மூலம் ஏமாற்ற வேண்டுமா?




உங்கள் நம்பரை வைத்து , உங்களுக்கே தெரியாமல் பலருக்கு SMS அனுப்ப முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்களை விடுங்கள் ஏன் ஜனாதிபதி என்ற பெயரில் கூட SMS அனுப்பலாம்.


உங்கள் Mobile இல் இருந்து உங்கள் நண்பருடைய Mobile இற்கு SMS அனுப்பினால்,.உங்கள் நண்பர் இலகுவாக அதை புரிந்து கொள்வார், அதாவது அந்த SMS உங்களிடம் இருந்துதான் வந்தது என்று.

அவர் இலகுவாக உங்களை அடையாளம் கண்டமைக்கு காரணம் அந்த SMS இல் உங்கள் Mobile No உம் கூடவே சென்றமைதான் காரணம் (Sender ID your Mobile No)

Mobile No இனை மறைத்து SMS அனுப்புவது எப்படி என்று முதலில் சொல்கிறேன்.இதற்கு நல்ல உதாரணம் சொல்லப்போனால் ஜனாதிபதியிடம் இருந்து உங்களுக்கு புதுவருட வாழத்து செய்தி வரும் அல்லவா? அதற்கு உங்களால் Reply பன்ன முடியுமா? அந்த SMS எந்த நம்பரில் இருந்து வந்தது என்று உங்களால் கண்டுபிக்க முடியுமா? இல்லை தானே? இன்னும் உதாரணம் சொல்லப்போனால் Airtel இல் இருந்து (Dialog, Mobitel) வரும் SMS இனையும் குறிப்பிடலாம்.

இதனை நமது Mobile இல் வைத்து செய்ய முடியாது, இதை இணையத்தில் தான் அதிக செலவு செய்து செய்ய முடியும்.இருந்தாலும் இலவசமாக (25 SMS) இந்த சேவையை வழங்கும் ஒரு இணையதளத்தை இன்று உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.

01.இங்கு சென்று நீங்கள் ஒரு கணக்கு திறந்து கொள்ளுங்கள்

02.நீங்கள் பதிவு செய்த Mobile No இற்கு அவர்கள் Password இனை அனுப்பி வைத்து இருப்பார்கள்.உங்கள் Username இனையும் Password இனையும் வைத்து அந்த தளத்தில் உள்நுழைந்த கொள்ளுங்கள்.

03.Send SMS to Number

04.Send SMS To : 
நீங்கள் SMS இனை யாருக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அவருடைய Mobile Noஇனை Country Code உடன் கொடுக்கவும்.



05.Sender ID From : யாருடைய பெயரில் இருந்து நீங்கள் SMSஅனுப்ப நினைக்கிறீர்களோ அவருடைய பெயர் அல்லது Mobile No இனை அந்த இடத்தில் கொடுக்கவும்.


06.Message : இதில் விரும்பிய செய்தியை டைப் செய்யவும்.


07.பிறகு Send SMS என்ற பட்டனை க்ளிக் செய்தால் சாரி.அவருக்கு அந்த SMS உடனே கிடைத்து விடும்.







மீண்டும் ஒருமுறை கூறிக்கொள்கிறேன்.தயவு செய்து இதனை தவராக பயன்படுத்த வேண்டாம்.

Tuesday, December 10, 2013

பில் கேட்ஸ் - வாழ்க்கை வரலாறு தெரிந்து கொள்வோம்



பில் கேட்ஸ் (William Henry Bill Gates III) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருளாரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன “பில் கேட்ஸ்” தொடர்ந்து பல வருடங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலேயே இருந்து வருகிறார். 1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்லியன்கள் ஆகும். இன்று இவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள், 105 நாடுகளில் சேவை புரிகின்றனர்.

வாழ்க்கை வரலாறு

பில் கேட்ஸ் 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் நாள் அமெரிக்கா, சியேட்ல்,வொசிங்டன் (America, Seattle, Washington) எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் 'வில்லியம் கெச் கேட்ஸ்' அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். தாயாரின் பெயர் 'மேரி மேக்ஸ்வெல்' வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியை ஆவார். இவர்களின் மகனான பில் கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம்,அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார். பில் கேட்ஸ் தனது பதி்மூன்றாவது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடசாலையான லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணனி ஆர்வமும் திறைமையும் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார்.

13 வயதான அக்காலத்திலேயே மென்பொருள் எழுதவும் தொடங்கிவிட்டார்.

1973 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) சென்றார். அங்கே இஸ்டீவ் பாள்மர் என்பவர் இவரது நண்பரானார். இஸ்டீவ் பாள்மரின் வீட்டில் இருந்தே படித்தார். இருப்பினும் இவரது ஆர்வம் கணனி மென்பொருள் எழுதுவதிலேயே இருந்தது.

1975 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகக் கல்வி முற்று பெற்றப் பின் தனது சிறு வயது நண்பரான பவுல் எலன் (Paul Allen) என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். கணனித்துறை பிற்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனும் தீர்க்கத்தரிசனம் இவருக்குள் இருந்ததோ என்னவோ, இவரும் இவரது நண்பரும் இணைந்து மென்பொருள்களை மும்முரமாக எழுதினர். இவருடைய இத்தொலை நோக்குச் சிந்தனைத்தான் பிற்காலத்தின் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.
இன்றை உலகில் சாதாரணக் கணனி பாவனையாளர் முதல் அலுவலகங்கள்,நிறுவனங்கள் வரை மைக்ரோசொப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. கணனி இயங்குத் தளங்களை (ஒப்பரேடிங் சிஸ்டம்) பொருத்தவரையிலும் 85% சதவீதமானவை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களாகவே உள்ளன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ் XP" ஒரு புரட்சியையே ஏற்படுத்திய இயங்கு தளமாகும். மைக்ரோசொப்ட்டின் கடைசியான இயங்குதளமான“விண்டோஸ் விஸ்டா” 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதனைக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள், 600 கோடி டொலர்கள் செலவில், 5000கணனி மென்பொருள் வல்லுநர்கள் உழைப்பில் உருவாகியுள்ளது. இதில் 300இந்திய கணனி மென்பொருள் வல்லுநர்களும் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இன்றையக் கணனி உலக நுட்ப வளர்ச்சிக்கும், அறிவியல் மாற்றத்திற்கும் பில் கேட்ஸ் அவர்களின் தனிமனிதத் திறமையும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கும் அளப்பரியது. பொருளாதாரத் துறையை எடுத்துக்கொண்டாலும் இன்றைய உலகின் "பொருளாதாரத் தந்தை" என்று பில் கேட் அவர்களையே குறிப்பிடலாம் என கூறுவோரும் உளர்.
பில் கேட்ஸ் எழுதிய நூல்கள்
பில் கேட்ஸ் "கொலின்ஸ் எமிங்வே" (Collins Hemingway) என்பவரும் சேர்ந்து எழுதிய “Business @ the speed of Thought” எனும் நூல் 25 மொழிகளில் வெளியாகி பெரும் பறப்பறப்பை ஏற்படுத்தியது. இந்நூல் பல பத்திரிக்கைகளினதும் சஞ்சிகைகளினதும் பாராட்டுக்களை பெற்றது. பில் கேட்ஸின் “The Road Ahead'எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு அதுவும் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு தொழிலதிபராக மட்டுமன்றி,எழுத்துலகிலும் தடம் பதித்தவர் பில் கேட்ஸ்.
இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும், இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்தார்.
இவற்றைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கான நிறுவனம் ஒன்றைத் திறந்து அதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு பணியாற்றியும் வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிறுவனத்திற்கு "பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்”எனப் பெயரிட்டுள்ளார். "மெலிண்டா" என்பது இவரது துணைவியாரின் பெயராகும்.

History Of Google "கூகிள் வரலாறு"

 History Of Google "கூகிள் வரலாறு"
Google ஒரு பிரபல்யமான தேடு பொறியாகும் இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப் படுகின்றது.
Google 1996ம் வருடம் ஜனவரி மாதம் ,லாரி பேஜ்(Larry Page)உம் இவரது சக மாணவரான சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியா விலுள்ள ஸ்ரான்பெஃர்ட்(stanford) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராச்சிக்கான தலைப்பு (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு)இன் முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரி பேஜ் இன் ஆராச்சிக்கான விடையமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடையம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு முகமான வரிசை) பதிலாக (கணனியின் திரையில்) கொடுப்பதை விட, தமது தேடுகருகியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராச்சிக்கு புனைபெயராக 'பாக்ரப்' (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின் புல இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி "ராங்டெக்ஸ்" (rankdex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
தேடப்படும் விடையம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட்(stanford) பல்கலைக்கழக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு Google தோன்றவும் அடிகோலினர்.
ஆரம்பத்தில் ஸ்ரான்பேஃர்ட் பல்கலைகழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்க்காக google.stanford.edu என்ற பெயர் பாவிகப்பட்ட போதிலும் பின்னர் google.com என 1997 ம் வருடம் செப்ரம்பர்15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 ம் வருடம் செப்ரம்பர் 15ம் நாள் Google தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.1998ம் ஆண்டு செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் car grageல் Google வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர். மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக googol.com என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்
(googol என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப் பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை.).எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "Google" என்ற புதிய சொல். car grageல் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999 ம் மார்ச் மாதம் சிலிக்கன்-பள்ளத்தாக்கு(Silicon Valley) இற்கு மாற்றலாகின.அங்கு வெவ்வேறு இரு இடங்களில் Google இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்ரு. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி googleplex எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை Google கொள்முதல் செய்தும் கொண்டது.
Google தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து Google சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும்,இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும்(click) விகிதத்திலும் விற்க்கப் படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானது goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். (goto.com என்ற இதன் பெயர் overtrue services வாகவும் பின்நாளில் Yahoo! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்ரிங்" ஆயிற்று.). கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக
வெற்றியீட்டி வருகிறது.
ஆரம்பத்தில் "கூகோல்"(googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்"(Google) என்பது மிக பிரபல்யம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்பேஃர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை 'கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது.' என அர்த்தப் படுத்தியும் உள்ளது. கூகிள் தேடுபொறி(google search) தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி (PageRank mechanism) காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது. Google பங்குச் சந்தை வருகை
கூகிள் தேடுபொறி 1998 செப்ரம்பர் 7இல் அமெரிக்காவின் கலிபோஃர்னியா மாநிலத்தில் நிறுவப்பட்டது. இணைய தேடுதலிலும் இணைய விளம்பரத்திலும் விஷேட பங்குவகிக்கும் Google, 2004ம் ஆகஸ்ட்டு மாதம் 19ம் நாளில் இருந்து பொது மக்கள் நிறுவனமாக தன்னை பதிவு செய்துகொண்டது. இந்த நிறுவனத்தில் 15,916ம் முழுநேர வேலையாட்கள் (2007ம் செப்ரெம்பர் 30ம் கணக்கெடுப்பின் படி)பணியாற்றுவதுடன் இதுவே "நாஸ்டாக்"(NASDAQ) இல் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் பெரியதுமாகும். லாரி பேர்ஃஜ் ,சேர்ஜி பிரின் இனால் சேர்ந்து உருவாக்கப்பட்ட கூகிள் நாஸ்டாக் பங்குச்சந்தையில் வந்த 2004ம் ஆக்ஸ்ட்டு 19ம் அன்று $1.67 பிலியன்களுக்கு பங்குகள் விற்பனை ஆகியதுடன் $23 பில்லியன் மேலாக Google நிறுவனம் மதிப்பாகியிருந்தது. படிப்படியாக தொடரான புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றய நிறுவனங்களை கொள்முதல் செய்வது, பங்குதாரர்கள், ஆரம்பத்தில் இருந்த விளம்பர யுக்தி விஸ்த்தரிப்பு, இணைய மின்-அஞ்சல், இணையவழி வரைபடம், அலுவலக உற்பத்தி ஆகியவற்றுடன் இணையவழி வீடியோவையும் இணைத்து கொண்டதன் மூலமாக பன்மடங்கு (4மடங்கிலும் மேலாக) மதிப்பில் கூகிள் தன்னை தற்போது உயர்த்திக் கொண்டுள்ளது. அத்துடன் 2005ம் யூன் மாதம் $52 பில்லியன் சந்தைப் பெறுமதியுடன் $7 பில்லியன் பணத்தினையும் கூகிள் தம் வசம் வைதிருந்தது. இத்தனைக்கும் "பிசாசு மாதிரி இருக்காதீர்!" ("don't be evil" இதையே தனது வியாபார அடை மொழியாக கூகிள் பதிவு செய்திருந்தது.), என மற்றயவர்களை ஆரம்பத்தில் இருந்து கூறிவந்த கூகிள் தற்போது தனது நிலைப் பாட்டினை நியாயப்படுத்தி வருகிறது. மேலும், கூகிள் தனது தேடுபொறியின் இலச்சனையில் பலவித கண்கவர் யுக்திகளை விஷேச தினங்களில் "Google Doodles" வெளியிட்டும் வருவதும் யாருமறிந்ததே.
மூலதனமும் பங்குச் சந்தையும்
முதலாவது முதலீடாக ஒரு இலட்சம் டொலர்களை "சண்மைக்கிரோ"(SunMicrosystem)இன் ஸ்தாபகர்களில் ஒருவர் மூலம் மட்டுமே பெற்றனர் என்பதுடன், அப்போது Google நிறுவனம் தோன்றி இருக்கவுமில்லை. இந்த முதலீட்டின் பின் 6 மாதங்கள் சென்ற நேரத்தில் பல முதலீட்டாளர்கள் முதலிட முன் வந்தும் இருந்தனர். அத்துடன், 2003ம் ஒக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையில் கூகிளை எடுத்துச்செல்ல ஆலோசிக்கும் வேளை "மைக்கிரோ சொப்ற்"(MicroSoft) புகுந்து பங்காளியாக அல்லது தத்து எடுப்பதற்கு எடுத்த முயற்சி கைகூடமற் போயிற்று. ஜனவரி 2004இல் உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான "மோர்கன் ஸ்ரான்லி"(Morgan stanley) ,"கோல்மான் சாச்ஸ்" (Goldman Sachs) இனால் பங்குச் சந்தையில் சேர்வதற்கான ஏற்பாடு தொடங்கபட்டது. பங்குச் சந்தையில் முதல்நாள் சேரும் வேளை $4 பில்லியன்களாவது திரட்டப்படும் எனவும் கணக்கிட்டனர். இதனிடையே கூகிளானது 2004ம் மேமாதம் இரு பெரிய முதலீட்டளர் வங்கியில் ஒன்றான கோல்மானை வெட்டி விட்டு வேறொரு பிரபல்யமான வங்கியை இணைத்துக் கொண்டு 2004ம் ஆகஸ்ட்டு 19ம் நாள் முதல் முதலாக பங்குச் சந்தைக்கு 19,605,052 பங்குகளுடன் வந்தபோது ஒவ்வொரு பங்கும் $85க்கு விற்க்கப்பட்டது. முதல் நாள் மொத்தமாக கைமறிய பங்குகள் 22,351,900 என்பதுடன் அன்றய இறுதி நேர விலை $100.34 ஆக மூடப்பட்டது, இது உத்தேசிக்கப்பட்ட அளவு தொகையை விடவும் மிக குறைவாகவும் இருந்தது. எனினும், அன்று கூகிளின் இரட்டையர்கள் தம்வசம் 271 மிலியன் பங்குகளை வைதிருந்ததன் மூலமாக $23 பிலியன்கள் மேல் நிறுவனத்தை மதிப்பு ஏற்றியதோடு $1.67 பில்லியன்களை பணமாக திரட்டியும் கொண்டனர். அத்தோடு கூகிளில் பணியாற்றும் பலரையும் அன்று திடீர் கடதாசி டொலர் மில்லியனர்கள் ஆக்கியதும் அல்லாமல் வியாபார எதிரியாக இருக்கக் கூடிய "யாகூ" ( yahoo! 8.4 மில்லியன் Google பங்குகளை நஸ்டஈடாக பெற்றுக் கொள்ள ஒரு பேரத்தில் கூகிளின் பங்குச் சந்தை வருகையின்10 நாள் முன் உடன் பட்டன.) ஐயும் ஆக்கியிருந்தது. இதன் அபார தொடர் வளர்ச்சியில் 2005ம் யூன் மாதம் கூகிள் நிறுவனம் $52பில்லியன்கள் (பங்குகள் தவிர $7பில்லியன்கள் பணமாக) மேல் மதிப்பானதுடன் இதுவே உலகின் மிகப்பெரிய பெறுமதியுள ஊடகவியல் நிறுவனம் ஆயிற்று. தொடற்சியாக பங்குகள் ஏற்ற இறக்கம் கண்டு 2007ம் ஒக்டோபரில் ஒரு பங்கு $700 ஆக இருந்த கூகிளின் பங்குகள் அமெரிக்கா, லண்டன் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்டுள்ளது.
சுவீகரிப்பு, கூட்டுக்கள்.
கூகிள் பெப்ரவரி 2003இல் weblog இன் முன்னோடியும் "புளக்கர்"(blogger) இன் சொந்தக் காரரான "பைரா லாப்ஸ்"(Pyra Labs)ஐ சொந்தமாக்கிற்று. உலக இணையத் தளத்தின் 84.7 விகிதமான தேடுதல்களை 2004ம் முற் பகுதியில் கூகிள் நிறுவனமானது யாகூ(YAHOO!), ஏஓஎல்(AOL), சிஎன்என்(CNN) ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து செய்திருந்தது, பின்பு 2004ம் பெப்ரவரி இல் யாகூ விலகிக் கொண்டு தனது சொந்த தேடுபொறியை தொடங்கிற்று. யாகூ விலகிக் கொண்ட விடயம் கூகிள் நிறுவனம் சந்தித்த ஒரு பெரிய சவாலாக இருந்த போதிலும் G-mail,orkut, மற்றும் புதிய பல யுக்திகிள் மூலமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. அத்துடன் கூகிள் நிறுவனம் தனது நீண்டகால (40வருடம்) ஆராச்சிக்கான "நாஸா"(NASA)இன் கூட்டு 2005ம் செப்ரம்பரிலும் (இந்த கூட்டு ஆய்விற்கான கட்டிடத்தின் பரப்பளவு 11இலட்சம் சதுர அடிகள் அல்லது 42ஏக்கர்களாகும்.), இணையத்திற்கான கூட்டு "ஏஓஎல்"(aol) லுடன் டிசெம்பர் இலும் உருவாக்கிக் கொண்டது. மேலும், "சண்மைக்கிரோ" உடன் தொழில் நுட்ப்பத்தை பகிர்ந்து கொள்வதோடு, கூகிள் நிறுவனம் தனது ஊளியர்களை "ஓப்பிண் ஆபிஸ்"(OpenOffice.org) நிறுவன வேலைகளிலும் வாடகைக்கு அமர்த்தி உள்ளது. இதனிடையே 2004கும் 2006ம் வருட இறுதிக்கும் உள்ள காலகட்டத்தில் பல மென்பொருள் முன்மாதிரி நிறுவனங்களையும்(Trendalyzer,Upstartle,AdscapeMedia) ரேடியோ விளம்பர நிறுவனம் "டிமார்க்"(dMarc)ஐ தம் வசமாக்கிக் கொண்டதுடன் $900 விளம்பர உடன்பாட்டை "மை ஸ்பேஸ்"(MySpace) உடன் செய்தனர். கூடவே, 2006இன் இறுதி காலத்தில் "யூ ரியூப்"(You Tube) என்ற மிகவும் பெயர் பெற்ற இணையத்தள வீடியோ $1.65 பில்லியனிற்கு கூகிளினால் கொள்முதலானது, இத்துடன் விக்கி தொழில் நுட்பத்தை வடிவமைத்த "ஜொற்ஸ்பொற்"(JotSpot)ம் சொந்தமாக்கப்பட்டது. இத்துடன் நிற்காமல் 2007ம் ஏப்ரலில் $3.1பில்லியன் கொடுத்து "டபள் கிளிக்"(Double Click)
ஐ கொள்முதல் செய்ததோடு 2007ம் யூலை 9இல் "பொஸ்டினி"யும் கொள்முதல் செய்து கொண்டது. இத்தனைக்கும் மத்தியில் தனது பரம எதிரியான 'மைக்கிரோ சொப்ற்'(MicroSoft) இன் பல திறமை உள்ளவர்களையும் தம்வசம் ஈர்த்ததுடன் அந் நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் வெளியே இரகசியமாக 2005ம் டிசெம்பர் 22ல் தீர்த்தும் கொண்டது. கூகிள் நிறுவனம் 2006ல் ".mobi" எனப்படும் கைத்தொலைபேசி இணைய முகவரி தோற்றத்திற்கு காரண கர்த்தாவாகவும், முதலீடு இட்ட நிறுவனமாகவும் முன்நிலை படுத்தியதோடு 'கூக்ள்-மோபி' இன் சொந்தக் காரருமாகவும் கூகிள் உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
நன்கொடை
2004ல் இலாபம் ஈட்டாத "கூகிள்.ஓர்யி"(Google.org)ஐ நிறுவியதோடு ஆரம்ப நிதியாக $1பிலியன் வைப்பு செய்யப்பட்டது. இந் நிறுவனத்தின் முன்நிலை கவனிப்புக்களாக சூழல் வெப்பமாகுதல் தடுத்தல்,உலக சுகாதாரம்,உலக வறுமை ஒழிப்பு என்பன உள்ளடக்கப் பட்டுள்ளது. அத்துடன் இந்த அமைப்பின் முதல் திட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகனங்களை வடிவமைகும் திட்டம் டாக்டர்.லாரி தலைமையில் தொடங்கப் பட்டுள்ளது.
முடிவு உரை
இந்த கட்டுரை அமெரிக்காவின் பொருளாதார வீழ்சி முன்னதாக உள்ள தகவல்களின் அடிப்படையில் மொழி பெயர்க்கப்பட்டதாகும். பொருளாதார நிலைமைகள் பாதகமகவுள்ள போதிலும் கூகிள் பல வேலைத்திட்டங்களையும் முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக மினியல் புத்தக நூலகம் (80 இலட்சம் புத்தகங்களை இயந்திர உதவியுடன் மணிக்கு 3000 பக்கம் வேகத்தில் scan செய்யப்படுகின்றன.) வேகமாக உருவாகிவருகின்றது. மேலும், இது போன்ற கட்டுரை மொழி பெயர்ப்புக்கள் இன்றி தன்நியக்க English-Tamil வெகு விரைவில் வரவும் உள்ளது. எனவே, அறிவுத்தாகம் தீர்க்க ஒரு "கூகிள்" நண்பன் கிளம்பிவிட்டான் என்று கூறி அன்புடன் நிறைவுசெய்கிறேன்.

Source: http://www.google.com/corporate/history.html ,

Monday, December 9, 2013

சாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

சாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

சாதனையாளர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் அனைவரிடமும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி…. சினிமா நட்சத்திரங்களோ அல்லது எழுத்தாளர்களோ அல்லது தொழிலதிபர்களோ அல்லது விளையாட்டு வீரர்களோ யாராக இருந்தாலும் எந்த துறையை சேர்ந்த சாதனையாளர்களாக இருந்தாலும் சரி… கடவுள் நம்பிக்கை இருப்பவர்களானாலும் சரி… இல்லாதவர்களானாலும் சரி… அவர்கள் அனைவரிடமும் சொல்லி வைத்தார்ப்போல இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா?……………. அதிகாலை எழுவது!

“Early to bed and early to rise, makes a man healthy wealthy and wise.” Benjamin Franklin

நீங்கள் வேண்டுமானால், உங்கள் வட்டத்தில் உள்ள உங்களுக்கு தெரிந்த மிகப் பெரிய சாதனையாளர் என்று நீங்கள கருதுபவர் எவரையாவது கேட்டுப்பாருங்களேன்… நிச்சயம் அவருக்கு அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் இருக்கும்.

உலகப் புகழ் பெற்ற பல தொழில்துறை ஜாம்பவான்கள் பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், உலகப் பெரும் பணக்காரர்கள் இவர்கள் அனைவரும் அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் உடையவர்களே.

ஜெனரல் மோட்டார்ஸ் சி.இ.ஒ.  டான் ஆகர்ஸன், விர்ஜின் அமெரிக்கா சி.இ.ஒ. டேவிட் குஷ், ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஒ. டிம் குக், ஆக்சிஜென் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஒ. கெர்ரி லேபோர்ன், யூனிலீவர் சி.இ.ஒ. பால் போல்மன், சிஸ்கோ நிறுவனத்தின் சி.டி.ஒ. பத்மஸ்ரீ வாரியர், பெப்சிகோ முன்னாள் சி.இ.ஒ ஸ்டீவ் ரெய்னி மன்ட் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களும் இயக்குனர்களும் அதிகாலை எழுபவர்களே.

கோடிக்கணக்கில் மாத ஊதியம் பெறும் இவர்களுக்கு நேரம் என்பது எத்துனை அரிய ஒரு விஷயம் என்று தெரியுமல்லவா? நம்மை விடவா அதிக நேரம் கிடைக்கபோகிறது?  ஆனால் அதிகாலை இவர்கள் எழுகிறார்களே எப்படி? …ம்ம்ம் அது தான் வெற்றிக்கான சூத்திரத்தின் முதல் படி.

அதிகாலை எழுந்திருப்பதன் அவசியத்தை வேத நூல்களும் இதிகாசங்களும் கூட பல இடங்களில் வலியுறுத்தியிருக்கின்றன.

பகல் தொடங்குவதற்கு முந்தைய விடியற்காலை நேரம் நமக்கு பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது. இந்த நேரத்தில் படுக்கையில் இருந்து எழுதுவிடவேண்டும்.

அதிகாலையில் எழுந்திருக்கவேண்டுமானால் இரவு நாம் விரைவில் உறங்கச் செல்வது முக்கியம். ஆரோக்கியமான ஒரு உடலுக்கு தினசரி 6 அல்லது 7 மணி நேரம் உறக்கம் அவசியம். அதற்கு மேல் வேண்டியதில்லை.

காலை சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள்  4.00 முதல் 5.00 க்குள் எழுந்துவிடவேண்டும். எழுந்தவுடன் நமது உள்ளங்கையை பார்ப்பதும், இறைவனின் திருவுருவப்படத்தை பார்ப்பதும் அவசியம்.

அதிகாலைச் சிறப்பு

சூரியன் உதிக்கும் முன்பே பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். கூட்டமாகச் செல்லும் பசுக்களின் குளம்படி பட்டு புழுதி பறக்கும். இத்தூசி பட்ட காற்று, பாவம் போக்கும் தன்மை கொண்டதாகும். இதற்கு “கோதூளி’ என்று பெயர். அதிகாலைப் பொழுதை ஜோதிட சாஸ்திரம், “கோதூளி லக்னம்’ என்று பசுவின் பெயரால் குறிப்பிடுகிறது. இவ்வேளையில் செய்யும் பூஜை, மந்திர ஜெபம்,புதுமனை புகுதல், மந்திர உபதேசம், ஹோமம், யோகப்பயிற்சி, பாடம் பயில்தல் போன்ற சுபவிஷயங்கள் பன்மடங்கு பலன் தரும். மனம் மிகத் தூய்மையுடன் இருப்பதால், இந்தநேரத்தை, “பிரம்ம முகூர்த்தம்’ என்றும் குறிப்பிடுவர். கோதூளி லக்னத்தில் கோயில்களில் விஸ்வரூபதரிசனம் நடத்தி சுவாமிக்கு முன் கோபூஜை நடத்துவர்.

எனவே மேற்கூறிய நல்ல நேரத்தில் எழுந்தவுடன் நமது நாவிலிருந்து வரும் முதல் சொல், இறைவனின் நாமமாக இருக்கவேண்டும்.

காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

எழுந்தவுடன் காலைக்கடன்களை பல்துலக்குதல் உள்ளிட்ட காலைக்கடன்களை முடித்துவிட்டு  (இது ஆரம்பத்தில் சற்று கஷ்டமாக இருக்கும் போகப் போக சரியாகிவிடும். உங்களாது செயல்பாடுகளுக்கேற்ப உடல் தன்னுடைய செயல்பாட்டை மாற்றிக்கொண்டுவிடும்) உடற்பயிற்சியோ அல்லது யோகாசனமோ அவரவர் விருப்பப்படி செய்யலாம். ஜிம்முக்கு செல்பவர்கள் செல்லலாம்.

உடற்பயிற்சி முடிந்த பின்னர் சிறிது நேரம் கழித்து குளித்து முடித்து, அவரவர் வழக்கப்படி திருநீற்றையோ திருமண்ணையோ அணிந்து கொண்டு, இறைவனின் படத்துக்கு முன்னர் திருவிளக்கேற்றுவது அவசியம். பெண்கள் தான் விளகேற்றவேண்டும். ஆண்கள் ஏற்றவேண்டியதில்லை என்றெல்லாம் நியதி எதுவும் கிடையாது. ஆண்களும் விளக்கேற்றலாம்.

ஆரம்பத்தில் ஒரு ஒழுங்கீனம் அனைத்திலும் தென்படும். சில நாட்கள் கழித்து அவை ஒரு கட்டுக்குள் வந்துவிடும்.

அப்போது உங்களுக்கு பிடித்த சுலோகங்கள் எதுவேண்டுமானாலும் சொல்லலாம். கந்த சாஸ்தி கவசம், விநாயகர் அகவல், விஷ்ணு சகஸ்ரநாமம்… இவைகளில் எதுவேண்டுமானாலும் சொல்லலாம். அவரவர்க்கு இருக்கும் நேரம் மற்றும் சௌகரியங்களை பொறுத்து இதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

முறையாக திட்டமிட்டால் இவை அனைத்தும் சரியாக காலை 6.30 க்குள் முடித்துவிடலாம். அப்புறம் உங்கள் வழக்கமான் பணிகளை துவக்கலாம்.

அனைவருக்கும் 24 மணிநேரம் என்றிருக்க உங்களுக்கு மட்டும் (அதிகாலை எழும் பழக்கத்தால்) சற்று கூடுதல் நேரம் இருப்பது போல தோன்றும். எவ்ளோ பெரிய விஷயம் இது!

பணிச் சூழல் காரணமாக இதை கடைபிடிக்க முடியாதவர்கள் அதாவது நைட் ஷிப்ட்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பி.பி.ஒ.க்களில் பணிபுரிபவர்கள், தாங்கள் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்திகொள்ளவேண்டியது அவசியம். அவர்கள் பணி முடிந்து இல்லத்திற்கு திரும்பி, உறங்கியவுடன் மறுபடியும் எழுந்திருக்கும் நேரத்தை அந்த நாளின் தொடக்க நேரமாக கருதி இவற்றை செய்யலாம். தவறே அல்ல! அதில் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை உரிய நேரத்தை தேர்ந்தேடுத்து செய்யவேண்டும். மற்றபடி மனமிருந்தால் மார்க்கமுண்டு!

(முன்பெல்லாம் நான் இரவு விழித்திருந்து எழுதுவது, டி.வி. பார்ப்பது வழக்கம். நேரத்திற்கு எதையும் நான் செய்வதில்லை. மிகவும் கஷ்டப்பட்டு எனது பழக்கங்களை மாற்றிக்கொண்டு, நான் கடைபிடிக்க ஆரம்பித்து உங்களுக்கு இப்போது சொல்கிறேன். RIGHTMANTRA.COM துவக்கியதன் மிகப் பெரிய பலன் இது. தற்போது காலையில் சீக்கிரம் விழித்து வருகிறேன். அதன் மூலம் எழுத நேரம் கிடைப்பது ஒரு பக்கம், நான் நீண்ட நாட்களாக படிக்காமல் வைத்திருந்த நல்ல நூல்களை படிக்க முடிகிறது!)

சாஸ்திர ரீதியாக மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் ஆராய்ச்சி ரீதியாகவும் கூட அதிகாலை எழுந்திருப்பது நலம் பயக்கும். நம்ப முடியவில்லையா? கீழ்கண்ட லின்க்கை செக் செய்யுங்கள்.

http://www.telegraph.co.uk/health/healthnews/8763618/Early-risers-get-ahead-of-the-game.html

அதிகாலை எழும் பழக்கத்தை ஒரு மூன்று மாதங்களுக்கு செய்து பாருங்களேன். அப்புறம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை கண்கூடாக பார்ப்பீர்கள்.

“No one who can rise before dawn 360 days a year fails to make his family rich.” – Chinese proverb

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்

1. பணிவு

ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விசயங்களைப் பழகியவுடன் கர்வம் அவர்களுடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது. என்னைப் போல் யார்? என்று நினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல் படி. முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. இதற்குப் பதிலாகத் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது துணை நிற்கும்.

2. கருணை

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். உங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது அவர்கள் உதவுவதற்கு ஓடோடி வருவார்கள்.

3. பழகும் தன்மை

வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களுக்கு மேலே உள்ளவர்களிடமும், கீழே உள்ளவர்களிடமும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். திறந்த புத்தகமாக வாழத் தொடங்குங்கள். பல புதிய வெற்றி வாசல்கள் திறப்பதை அறிவீர்கள்.

4. அரவணைக்கும் குணம்

உலகில் எல்லாவிதமான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை ஒப்புக் கொண்டு, அவர்களிடம் உள்ள நல்ல விசயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு பழகத் தொடங்கினால் நட்பு வட்டம் பெருகும். வாழ்க்கை சிறகடிக்கும்.

5. இணைந்து பணியாற்றும் தன்மை

நாம் ஒவ்வொருவரும் பல தனிப்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்போம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் அந்த வெற்றி பல மடங்காக உயரும்.

6. முடிவெடுக்கும் திறன்

நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவை எடுக்கிறோம். நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்து எடுக்கும் முடிவுகள் நமது வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாக அமையும்.

இவையே நமது வெற்றியின் வளர்ச்சியைத் தூக்கிவிடும்.

எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்?

எத்தனை அதிர்ஷ்டக்காரர் நீங்கள்?

 

”நல்லதே பார், நல்லதே நினை, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று நம்பியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் அதை உபதேசிப்பவர் அந்த அறிஞர். இறைவன் தந்திருக்கும் நன்மைகளை சிந்திக்கவும், அவற்றிற்காக நன்றியுடன் இருக்கவும் தன் பிரசாரங்களில் கூறுவார் அவர். இருப்பவற்றிற்காக நன்றியுடன் இருந்தால் மட்டுமே மேலும் நன்மைகள் நம்மிடம் வந்து சேரும் என்று அவர் உறுதியாகச் சொல்வார்.

“ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு வரையுங்கள். வலது புறம் பெரிதாய் + குறியிட்டு உங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களை எழுதுங்கள். இடது புறம் – குறியிட்டு உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளையும், தீமைகளையும் எழுதுங்கள். உண்மையாக ஆழமாக சிந்திப்பீர்களானால் கண்டிப்பாக வலது புறம் உள்ள பட்டியல் தான் நீண்டு இருக்கும். நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டக்காரர் என்பதை அப்போது தான் உங்களால் உணர முடியும்” என்று ஒரு சொற்பொழிவில் அவர் சொன்னதுடன் அனைவருக்கும் ஒரு வெள்ளைத் தாளைத் தந்து அப்போதே அப்படி எழுதிப் பார்க்கச் சொன்னார்.

அப்படி எழுதியவர்களில் பெரும்பாலானோருக்கு – குறியில் தான் எழுத நிறைய இருந்தது. ஒருசிலர் மட்டுமே + குறியில் நிறைய எழுதி இருந்தார்கள். அவர்களிடம் இப்போது இருக்கும் வாழ்க்கைக்கு இறைவனிடம் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பச் சொன்னார்.

மீதமுள்ளவர்களில் + குறியில் மிகக் குறைவாக எழுதியவர்களில் ஒருவரைத் தன்னிடம் வரச் சொன்னார். முத்து என்பவர் – குறியில் பெரிய பட்டியல் இட்டிருந்தார். ஆனால் + குறியில் எழுத ஒன்றுமே இல்லை என்று எதுவுமே எழுதாமல் இருந்ததால் அவரே அந்த அறிஞரிடம் போகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அறிஞர் முத்துவிடம் இருந்து அந்தத் தாளை வாங்கிப் பார்த்தார். – குறியில் நுணுக்கி நுணுக்கி நிறைய எழுதி இருந்தார்.

அறிஞர் பேனாவை எடுத்துக் கொண்டு முத்துவிடம் கேட்டார். “உங்கள் மனைவி உங்களைப் பிரிந்து எவ்வளவு காலம் ஆகிறது?”

முத்துவிற்குக் கோபம் வந்து விட்டது. “என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து விட்டதாக யார் சொன்னது?  என்னுடன் தான் இருக்கிறாள். நாங்கள் அன்பாகத் தான் இருக்கிறோம்’

அறிஞர் + பகுதியில் கொட்டை எழுத்தில் எழுதினார். “அன்பான மனைவி உடன் இருக்கிறாள்”

பின் முத்துவிடம் கேட்டார். “உங்கள் குழந்தைகள் எந்த ஜெயிலில் இருக்கிறார்கள்?”

அறிஞராக இருந்து கொண்டு இப்படி ஏடாகூடமாகக் கேட்கிறாரே என்று கோபத்துடன் நினைத்த முத்து சொன்னார். ”என் பிள்ளைகள் நல்லவர்கள். ஜெயிலுக்குப் போகிற அளவில் மோசமாய் இல்லை”

அறிஞர் + பகுதியில் அடுத்ததாக எழுதினார். “நல்ல பிள்ளைகள் இருக்கிறார்கள்”

பின் அறிஞர் கேட்டார். “உங்கள் வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா?”

முத்து பொறுமையை இழந்தார். “மருந்து கண்டுபிடிக்காத வியாதி எல்லாம் எனக்கு இல்லை..”

அறிஞர் + பகுதியில் எழுதினார். “கொடிய வியாதி இல்லை”

இப்படியே முத்து சிறிதும் எதிர்பார்த்திருக்காத கேள்விகள் சிலவற்றைக் கேட்டு + பகுதியில் எழுதிக் கொண்டு போன அறிஞர் ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டுச் சொன்னார். “இவை எல்லாம் சாதாரண நன்மைகள் அல்ல. இவற்றில் ஒன்று இல்லா விட்டாலும் நரக வாழ்க்கை அனுபவிக்க நேர்வது நிச்சயம். அப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குத் தெரியாமலேயே இன்னும் நிறைய இருக்கின்றன. இத்தனைக்கும் சாதாரண நல்ல விஷயங்களுக்கு நான் இன்னும் போகவில்லை. அதெல்லாமும் கூட எழுத ஆரம்பித்தால் உங்களுக்கு + பகுதியில் எழுத இன்னும் பல பக்கங்கள் தேவைப்படும்....”

முத்து அங்கிருந்து போன போது புதிய மனிதராகப் போனார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்கள் + பட்டியலும் அதிகரித்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

முத்துவைப் போலத் தான் பலரும் இருக்கிறோம். எத்தனையோ நன்மைகள் நம்மிடம் இருந்தாலும், நமக்கு நடந்திருந்தாலும் அவற்றை அங்கீகரிக்கக் கூட மறந்து விடுகிறோம். அதில் ஒன்றில் குறைபாடு சிறிது வந்தால் மட்டும் அந்தக் குறைபாட்டை வைத்துத் தான் அதைக் கவனிக்கிறோம். அது அப்போது மட்டுமே பெரிய விஷயமாகி விடுகிறது. இந்தக் குணம் தான் நம்முடைய சந்தோஷமின்மைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.


அடுத்தவரிடம் இருந்து, நம்மிடம் இல்லாத நன்மைகளைக் கவனித்து வருத்தப்படும் அளவுக்கு நாம் அடுத்தவரிடம் இல்லாத, நம்மிடம் இருக்கும் நன்மைகளைக் கவனிக்க முடிந்தால், நாம் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதைக் கண்டிப்பாக உணர்வோம். உலகில் இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவற்றில் எத்தனை சிறிய சதவீதம் மட்டும் தான் நமக்கு உள்ளது என்பதும் நமக்குப் புரியும்.

-          பட்டியல் அனைவரின் வாழ்க்கையிலும் இருக்கவே இருக்கிறது. அப்படி இல்லாத ஒருவர் இந்த பூமியில் இது வரை பிறந்ததில்லை. இனியும் பிறக்கப் போவதில்லை. எனவே அதற்கு விதிவிலக்காகும் ஆசை யாருக்கும் வேண்டியதில்லை. + பட்டியலை அறிந்திராமல் வாழ்க்கையில் எதுவுமே சரியில்லை என்ற கற்பனை அபிப்பிராயம் இல்லாமல் இருந்தால் போதுமானது.

இருக்கின்ற நன்மைகளைப் பார்க்கின்ற மனநிலை இல்லாததால் முத்துவின் அதிர்ஷ்டத்தை சுட்டிக் காட்ட அந்த அறிஞர் சில ஏடாகூடமான கேள்விகள் கேட்க வேண்டி வந்தது. நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையோடு பார்க்க முடிந்தால் அடுத்தவர் உதவி இல்லாமலேயே நம்மிடம் உள்ள நன்மைகளை நன்றியுடன் நம்மால் உணர முடியும்.

சரி, நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என அறிய வேண்டுமா

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என அறிய வேண்டுமா

உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க  மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.,வின் மக்கள் தொகை நிதியமைப்பு, ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அந்த இணையதளத்தில் நீங்கள் நுழைந்து, உங்கள் வயது,உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற்போதைய முகவரி போன்ற தகவல்களை கொடுத்தால் அடுத்த வினாடியில் உலகில் நீங்கள் எத்தனைவது நபர் என்ற எண்ணிக்கை கிடைக்கும். ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட்பிரின்ட் உள்ளிட்ட ஐ,நா.,வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த நம்பர் உங்களுக்கு வழங்கப்படும்.


முதலில் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகும் அதில் தற்போதைய மக்கள் தொகை எண் இருக்கும். (அதை கவனியுங்கள் ஒவ்வொரு நொடிக்கும் 5 முதல் 10 அதிகமாகி கொண்டே இருக்கும். அவ்வளவு வேகத்தில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டு உள்ளது) அதில் உள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும். 


Get Started என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் இன்று விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவும். 


விவரங்களை பூர்த்தி செய்த பிறகு கீழே உள்ள Proceed என்ற பட்டனை அழுத்தினால் அடுத்த வினாடி உங்களுக்கு முன்னாடி உலகில் எத்தனை பேர் பிறந்து உள்ளார்கள் என காட்டும். 


மற்றும் உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களின் எண்ணிக்கை கண்டங்களின் அடிப்படையில் பிரித்து காட்டும். 

இந்த தளத்திற்கு செல்ல -www.7billionandme.org


Sunday, December 8, 2013

பில்கேட்ஸ் VS ஸ்டீவ் ஜாப்ஸ் | Windows VS Apple [பயோடேட்டா]

பில்கேட்ஸ் VS ஸ்டீவ் ஜாப்ஸ் | Windows VS Apple [பயோடேட்டா]

கணினி உலகில் மிகப்பெரிய இரு ஜாம்பவான்கள் பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்கு தளமான விண்டோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கையடக்க மொபைல் போனில் புகுத்தி கணினி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை ஏற்ப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் (இவர் சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்). இவர்கள் இருவருமே கணினி துறை இவ்வவளவு வேகமாக வளர்ச்சி அடைய முக்கிய காரணமானவர்கள். 

இதில் ஆச்சரியமான விஷயம் இவர்கள் இருவரும் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள்.  ஸ்டீவ் ஜாப்ஸ் மில்லினியர் நிலையை 1980 லேயே அடைந்து விட்டார். ஆனால் பில்கேட்ஸ் இந்த நிலையை 1986-ல் தான் அடைய முடிந்தது. ஆனால் அடுத்த பில்லினியர் தகுதியை 1987 லேயே பில்கேட்ஸ் பெற்று விட்டார். இந்த தகுதியை ஸ்டீவ் ஜாப்ஸ் பெற சுமார் 15 வருடங்கள் (1995) ஆகியது. மேலும் சில சுவாரஸ்யமான தவல்களை பெற கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.





 பிரபல சோனி நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க போகிறதாம். இவர்கள் இருவருக்கும் கணினி உலகம் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆகவேண்டு

Friday, December 6, 2013

எண் (7) ஏழின் சிறப்புக்கள்:


எண் (7) ஏழின் சிறப்புக்கள்:

1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
2. எழு குன்றுகளின் நகரம் ரோம்
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு பிறவி
5. ஏழு சொர்க்கம்(குரான்)
6. ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8. ஏழு வானங்கள். (Qur'an)
9. ஏழு முனிவர்கள் (Rishi)
10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு
13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16. மேலுலகம் ஏழு
17. கீழுலகம் ஏழு
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்
18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22. ஏழு புண்ணிய நதிகள்
23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24. அகப்பொருள் திணைகள் ஏழு
25. புறப்பொருள் திணைகள் ஏழு
26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27. கடை ஏழு வள்ளல்கள்
28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்
31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா
32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம் பெண்)