Wednesday, December 11, 2013

ப்ளாக் பதிவுகள் அதிகமான வாசகர்களை சென்றடைய முக்கியமான 10 டிப்ஸ்


நீங்கள் நிறைய பதிவுகள் எழுதினாலும் அது நிறைய வாசகர்களை சென்றடையவில்லை என்ற கவலையா, கவலை வேண்டாம் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

உங்களுடைய பதிவுகள் அதிகம் சர்ச் என்ஜினில் முன்னிலைபடுதுவதற்கு பதிவு எழுதும் பொழுது இந்த சில டிப்ஸ் களையும் மனதில் வைத்து பதிவு எழுதுங்கள்.

ப்ளாக் பதிவுகள் அதிகமான வாசகர்களை சென்றடைய முக்கியமான 10 டிப்ஸ்
  • தினமும் ஒரே நேரத்தில் முடிந்த வரை பதிவுகளை பதிவுடுங்கள்.
  • தினமும் முடிந்த வரை குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பதிவுகளை பதிவிடுங்கள். ஒரு பதிவிற்கும் மற்றொரு பதிவிற்கும் 10 to 15 நிமிட இடைவெளியில் பதிவிடுங்கள்.
  • குறைந்தது வாரம் ஒரு பதிவாது பதிவிடுங்கள்.
  • உங்களுடைய பதிவு குறைந்தது 500 வார்த்தைகள் இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள். அதற்காக மிகவும் நீளமாக பதிவு எழுத வேண்டாம். அதற்கு பதிலாக இரண்டு பதிவுகளாக எழுதலாம்.
  • உங்களுடைய பதிவுகள்  உங்களுடைய சொந்த நடையில் எழுதவும, அடுத்த பதிவில் இருந்து ஒரு வரி கூட copy செய்வதை தவிர்க்கவும்.
  • அதிகமாக keyword களை பயன்படுத்தி எழுதவும். உங்களுடைய ப்ளாக் கிற்கு என்று சில கீ வோர்ட் களை உருவாகி அவற்றை பதிவுகளில் பயன்படுத்தவும்.
  • பதிவுக்கு சம்பந்தம் இல்லாத keyword களை பயன்படுத்த வேண்டாம்.
  • ஒரே பதிவில் திரும்ப திரும்ப ஒரே தகவலை சொல்ல வேண்டாம். அல்லது அதை வேறொரு நடையில் சொல்ல முயற்சிக்கலாம்.
  • உங்களின் பதிவின் தலைப்பு இதுவரை யாரும் வைக்காத தலைப்பாகவும் பதிவிற்கு மிகவும் பொருத்தமான தலைப்பாகவும் வைக்கவும்.
  • உங்களுடைய பதிவிற்கு முடிந்த வரை நீங்களே படங்களை உருவாக்கவும், ஒவ்வொரு பதிவிற்கும் முக்கியமாக ஒரு படத்தை இணைக்கவும்.

No comments:

Post a Comment