Thursday, April 17, 2014

கோப்புக்களை விரைவாக பிரதி செய்யவும் இடமாற்றவும் உதவும் மென்பொருள்


கணனிகளில் கோப்புக்களை பிரதி செய்தல் மற்றும் இடம்மாற்றுதல் போன்ற செயன்முறையானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
எனினும் பெரிய அளவு கோப்புக்களை இவ்வாறு பிரதி மற்றும் இடம்மாற்றம் செய்யும்போது அதிகளவான நேரம் எடுக்கின்றது.
இந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு தற்போது Ultracopier எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Wednesday, February 12, 2014

படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?


தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம். 
இதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Size மட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமே Upload செய்ய  முடியும். 
மேலே உள்ள படத்தின் ஒரிஜினல் சைஸ் 2.4 MB. JPEGmini இதனை 500KB அளவுக்கு குறைத்துள்ளது.
இதே போல உங்கள் ஒரிஜினல் படத்தின் Size பொறுத்து Compress ஆகி குறைந்த Sizeக்கு கிடைக்கும். உத்தேசமாக கீழே உள்ளபடி படத்தின் அளவு குறைக்கப்படும்.
JPEG Photo Resolution
Typical JPEGmini file size reduction
8 MP and higher
70 – 80%
3 – 7 MP
50 – 70%
1 – 2 MP
40 – 60%
Lower than 1 MP
30 – 50%
JPEGmini என்ற தளத்திற்கு சென்று Try It Now என்பதை கிளிக் செய்து படங்களை Upload செய்யலாம். ஒவ்வொரு படமாக செய்ய விரும்புபவர்கள் தளத்தில் Signup செய்ய தேவை இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களை Size குறைக்க விரும்பினால் அந்த தளத்தில் இலவசமாக Sign Up செய்து மொத்தமாக நிறைய படங்களை Upload செய்து அளவை குறைக்கலாம். ஒரே சமயத்தில் 1000 படங்கள் வரை Upload செய்யலாம். Image Size 200MB க்குள் இருக்க வேண்டும்.
படம் Size குறைக்கப்பட்ட பின் Download Photo என்பதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
முகவரி –  JPEGmini

The Web Blocker – குறிப்பிட்ட தளங்களை Block செய்ய உதவும் இலவச மென்பொருள்


இணையத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் உள்ளன. சில தளங்கள் பாதுகாப்பின்றி இருக்கலாம், அலுவலங்களில் சில தளங்களை Block செய்ய வேண்டி வரலாம். அவ்வாறு தேவைப்படும் போது எளிதாக The Web Blocker என்ற மென்பொருள் கொண்டு எப்படி குறிப்பிட்ட தளங்களை Block செய்வது என்று பார்ப்போம். 
முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்யும் போது ClaroBrowser Tool Bar, PC Utilities Pro, Babylon போன்றவை இன்ஸ்டால் செய்யலாமா என்று கேட்கப்படும், அப்போதெல்லாம் Decline என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். 
இன்ஸ்டால் செய்து முடித்த Desktop – இல் உள்ள The Web Blocker மென்பொருளை ஓபன் செய்யுங்கள். இப்போது நீங்கள் இதில் இயங்க உங்களுக்கு Password கொடுக்க வேண்டும். 
அடுத்து சில நொடிகளுக்கு பிறகு அந்த மென்பொருள் ஓபன் ஆகும். நீங்கள் முன்பு கொடுத்த Password கொடுத்து உள்ளே நுழையுங்கள். இப்போது மென்பொருள் கீழே உள்ளது போல இருக்கும். 
இப்போது “Add Address to Block List” என்பதற்கு கீழ் உள்ள பகுதியில் குறிப்பிட்ட தளத்தின் முகவரியை கொடுக்கவும். பின்னர் இடது பக்கம் User List என்பதில் எந்த User – க்கு இது பொருந்தும் என்பதையும் நீங்கள் தெரிவு செய்து “Block Address” என்பதை கிளிக் செய்யுங்கள். பெரும்பாலும் All Users என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது Block List என்பதில் நீங்கள் கொடுத்த தளம் சேர்க்கப்பட்டு விடும். 
இப்போது குறிப்பிட்ட தளத்தை ஓபன் செய்தால் கீழ் உள்ளவாறு வரும். 
இதே போல எத்தனை தளங்களை வேண்டுமானாலும் Block செய்து கொள்ளலாம். Block செய்த பின் மென்பொருளின் Desktop Shortcut – ஐ நீங்கள் நீக்கி விடுவது நல்லது.

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?


உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்
Team Viewer என்றால் என்ன
மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.
இதை தரவிறக்க இங்கே செல்லவும். Team Viewer 7.0. இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.
எப்படி இதை பயன்படுத்துவது?
Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.
மேலே படத்தில் உள்ளது போல உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.
நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது வரும் குட்டி விண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.
நான் Remote Control வசதி மூலம் Access செய்த கணினியின் Screenshot களை கீழே இணைத்துள்ளேன்.
 
நண்பரின் கணினியில்
கற்போம் தளம்
 
நண்பரின் My Computer பகுதி
இதில் இரண்டு வசதிகள் உள்ளன என்று சொல்லி இருந்தேன்.  இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய என்றும் சொல்லி இருந்தேன். இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.
இதன் Screen Shot கீழே உள்ளது.
 
நண்பரின் கணினியில் இருந்து எனக்கு File Transfer
உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம்.  சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.
இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.
இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.
இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும். இதைப் பற்றி பின்னர் பகிர்கிறேன்.
இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன
முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும்அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக மிக அவசியம்.  

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? – புதியவர்களுக்கு



இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Input Tools. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.
1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
2.Windows 8/Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும். 
3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.
4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும்.
இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.
5. Windows 7/Vista பயனாளிகள்
  • Control Panel ->Date, Time, Language, and Regional Options–> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.
  • Change keyboards… என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.
  • Language Bar க்கு வரவும்.
  •  Language Bar -ல் உள்ள  Docked in the taskbar  என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.
  • இப்போது Apply கொடுக்கவும்.  இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.
6.Windows XP பயனாளிகள்
  • Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.
  • முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.
  • இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.
  • இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.
7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும்.
8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.
9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்:
Amma – அம்மா
karpom – கற்போம் 
இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.
10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌
11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம்.
Browser
ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு.
Antivirus
அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு.
File Compression Software
File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள்.
Image/Graphics editor, paint program, and picture organizer
இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை.
Multimedia
கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள்.