Saturday, December 21, 2013

டிரையல் சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த


பெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள trail version வழங்குவார்கள் அதனை நிறுவி உபயோகித்த சில நாட்களில் அதன் validity Date முடிந்து விடும் , பிறகு என்ன அதனை 30 - 60 $ கொடுத்தோ வாங்க சொல்லுவார்கள் . கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் torrent ல் தேடி crack செய்து வருடம் முழுவதும் பயன்படுத்துவார்கள் .

இந்த குறையை நீக்க உதவும் சாப்ட்வேர் தான் DateCrackerஇதனை இலவசமாக Download செய்து பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம் .
நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் date expire ஆவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் இதனை பயன்படுத்தி அதன் உபயோகத்தை நீட்டிக்கலாம் ...

முதலில் இதனை Download செய்துகொள்ளுங்கள் Date Cracker Download  பிறகு அதனை இன்ஸ்டால் செய்ததும் இடதுபுறம் காட்டும் add Button click செய்துகொள்ளுங்கள் .

பிறகு அடுத்து தோன்றும் box ல் படத்தில் காட்டியவாறு program description எந்த software என்பதை கொடுங்கள் .


அடுத்து உள்ள simulated run date ல் expiration தேதியை type செய்துவிடுங்கள்
கீழே தோன்றும் Date cracker window ல்தோன்றும் file ஐ run செய்யுங்கள் அவ்வளவுதான்.

இதனை education purpose களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் .....இதன் மூலம் பெரும்பாலான சாப்ட்வேர்களை இம்முறையில் பயன்படுத்தலாம் . உபயோகமான ஓர் சாப்ட்வேர். click to Download

தமிழ் -தமிழ்-ஆங்கில அகராதி


நாம் ஆங்கிலம்-தமிழ் அகராதி உபயோகித்து இருப்போம்.
இந்த அகராதி தூய தமிழில் அழகான விளக்கங்களை
நமக்கு தருகின்றது:. சில கடினமான தமிழ்சொற்களுக்கு
நாம் எளிதாக தமிழ் வார்த்தை இதில் காணலாம்.அதேபோல் ஆங்கில வார்த்தைக்கான தமிழ் வார்த்தை
யையும் காணலாம். இந்த சாப்ட்வேர் சுமார் 70 எம்.பி.
அளவினை உடையது. இதை பதிவிறக்கம்செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம்செய்தும உங்க
ளுடைய கணிணியில் இன்ஸ்டால் செய்ததும்
 கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் முதலில் த (தமிழில் தட்டச்சு செய்ய) அடுத்து ? (நீங்கள்
இந்த சாப்ட்வேரை பயன்படுத்தும் வழிமுறை) அடுத்து E
(நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய) என மூன்று ரேடியோ
பட்டன்கள் இருக்கும் . உங்களுக்கு தேவையானதை
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு தமிழ் விசைப்பலகை தேவை
யென்றால் இங்குஉள்ள விசைப்பலகை பொத்தானை அழுத்த
வும். உங்களு்க்கு மேற்கண்ட விசைப்பலகை தோன்றும்.
அதில் உள்ளவாறு தமிழ்எழுத்துக்களை தட்டச்சு செய்யலாம்.

நான் தமிழில் ஆட்டம் என தட்டச்சு செய்தேன். அதற்கு
உண்டான வார்த்தைகள் இதில் வந்துள்ளன.
அதேப்போல் அந்த வார்த்தைக்கு தொடர்பான
சொற்களும் வலதுபுறம் விண்டோவில் தேர்வாகி
இருப்பதை காணலாம். அந்த வார்த்தையில் நாம்
கிளிக் செய்தாலும் நீங்கள் விரிவான அர்த்தங்களை
காணலாம்.
அதேப்போல் அந்த வார்த்தைக்கு முன்-பின்
சொற்களைளும் இதில் காணலாம்.
இதில் உள்ள விருப்பம் நீங்கள் கிளிக் செய்தால் உங்க
ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.


இதில் மொழி-விசைப்பலகை மற்றும் தேடுமுறையை
நாம் தேர்வு செய்து சரி யை அழுத்தினால் நமக்கு
தேவையானது கிடைக்கும்.அடுத்து விருப்பம் என்கின்ற
ரோடியோ பட்டனுக்கு கீழ் உள்ள (-) அழுத்தினால்
டிக் ஷனரியானது மினிமைஸ் ஆகிவிடும்.அதற்கு
அடுத்துள்ள புத்தகம் போன்ற ரேடியோ பட்டனை அழுத்தி
னால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் முதல் எழுததுக்கும் அடுத்த எழுத்துக்கும்தொடர்புடைய
வார்த்தைகள்-சொற்கள் நமக்கு கிடைக்கும். மேலும் இதில்
உள்ள இசை ரேடியோ பட்டனை அழுத்தினால் இனிய இசையை
நாம் கேட்கலாம். இதில் உள்ள ? அழுத்தினால் நமக்கு
இந்த அகராதியை பயன்படுத்தும் முறை விளக்கமாக வரும்.




இது இலவச-சோதனை தொகுப்பு . முழுமையான தொகுப்பை
 வாங்கஇதில் குறிப்பிட்ட முகவரியில் தொடர்புகொண்டு
வாங்கிக்கொள்ளவும்.

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய


Search your images online with TinEyeஇணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

Search your images online with TinEyeஇதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதள முகவரி : http://www.tineye.com
/

Friday, December 20, 2013

உங்கள் கணணியில் மென்பொருட்கள் எதுவுமின்றி விரும்பத்தகாத தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க [ Block Any Site In Your Computer ]

 இதற்காக நீங்கள் சிறியதொரு செய்கையை மேற்கொண்டால் போதும்.
முதலில் கீழே காட்டப்பட்ட பாதை ஒழுங்கில் “etc“ என்ற இடம்வரை செல்லவும்.
 
My Computer à C Drive à WINDOWS à system32 à drivers à etc
 C:\WINDOWS\system32\drivers\etc ]
இப்போ “etc“ என்றதில் "HOSTS" எனும் ஒரு கோப்பு [file] காணப்படும்.
இதனை Double Click செய்து அல்லது Right Click செய்தோ ஒரு NotePad இல் திறந்துகொள்ளுங்கள்.
இப்போ இவ் NotePad இன் இறுதியில் "127.0.0.1 localhost" என்பது காணப்படும். இதன் கீழே நீங்கள் தடைசெய்ய விரும்பும் தளத்திற்கான முகவரியை 127.0.0.2என்ற இலக்கத்திற்குப் பின்னால் கொடுக்கவும்.
உதாரணத்திற்கு கீழே பார்க்கவும்.
127.0.0.1 localhost
127.0.0.2 www.blockedsite.com
இவ்வாறே மேலும் பல தளங்களைச் சேர்க்க விரும்பினால் 127.0.0.2 என்ற எண்ணில் உள்ள இறுதி இலக்கத்தை ஒவ்வொன்றாக அதிகரித்து எழுதவேண்டியதுதான்.
உதாரணத்திற்கு கீழே பார்க்கவும்.
127.0.0.1 localhost
127.0.0.2 www.blockedsite01.com
127.0.0.3 
www.blockedsite02.com
127.0.0.4 
www.blockedsite03.com

பின்னர், “Save” என்பதைக் கொடுத்து அவ்NotePad ஐ சேமித்துக்கொள்க.
இனிமேல் உங்கள் கணணியானது விரும்பத்தகாத இணையத்தளங்களுக்கு செல்வதை தடைசெய்யும்.

தங்கள் மடிக்கணணியின் மின்கலம் தொடர்பான POWER REPORT ஐப் பெறுவதற்கு...

தங்கள் மடிக்கணனியில் நுகரப்படும் மின்சக்தி மற்றும் மின்கலத்தின் ஆயுள் காலம் தொடர்பான மிக நுட்பமாக கணிக்கப்பட்ட POWER REPORT ஐ விண்டோஸ்7 இயங்குதளத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமா? அப்படியாயின் கீழ் உள்ள செய்கையைப் பின்பற்றுங்கள்.

இதற்காக நீங்கள் administrator மூலமான command prompt ஐத் திறக்கவேண்டும்.
அதற்காக முதலில் Start Button ஐக் கிளிக் செய்து Search என்னும் இடத்தில் cmd என கொடுத்து Enter பண்ணுங்கள். இப்போ cmd icon ஆனது தோன்றியிருக்கும். இதனை right-click  செய்து " Run as administrator " என்பதை கொடுக்கவும்.


இப்போ உங்களுக்கு command line திறக்கும். இதிலே powercfg -energy என type செய்து Enter பண்ணவும். இப்போ கணணியானது மின்வலு தொடர்பான தகவல்களை திரட்ட ஆரம்பித்துவிடும். இதற்காக சில நிமிடங்கள் ஆகலாம்.
பின்னர் கீழ் காட்டியவாறு செய்தி தோன்றும். படத்தில் காட்டிய பாதை ஒழுங்கில் சென்று HTML வடிவில் உள்ள POWER REPORT இனை நாம் பார்த்து மின்சக்தி தொடர்பான அனைத்து விடயங்களையும் அறிந்துகொள்ளலாம்.


                                           [ Path:-    C:/ Windows/System32/energy -report.html 

விண்டோஸ் 8 இற்கான குறுக்குவழிப் பொத்தான்கள்.

விண்டோஸ்XP மற்றும் விண்டோஸ்7 இற்கான குறுக்குவழி பொத்தான்கள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்திருப்பீர்கள். இப்பதிப்பின் மூலம் புதிதாக அறிமுகமாகிய  விண்டோஸ் 8  இற்கான குறுக்குவழி பொத்தான்கள் சிலவற்றை பார்ப்போம்.




Windows 8 Metro Keyboard Shortcut Keys
Windows Key
Jump between Start Metro Desktop and Previous App
ESC
Return to Previous App
Windows Key + spacebar
Switch input language and keyboard layout
Windows Key + Y
Peek at the Desktop
Windows Key + O
Lock device orientation
Windows Key + V
Cycle through toasts
Windows Key + Shift + V
Cycle through toasts in reverse order
Windows Key + Enter
Launch Narrator
Windows Key + PgUp
Move Tiles to the Left
Windows Key + PgDown
Move Tiles to the Right
Windows Key + Shift + .
Move Metro App Split Screen Left
Windows Key + .
Move Metro App Split Screen Right
Winodws Key + S
Open App Search
Windows Key + F
Open File Search
Windows Key + C
Open Charms Bar
Windows Key + I
Open Charms Settings
Windows Key + K
Opens Connect Charm
Windows Key + H
Open Share Charm
Windows Key + Q
Open Search Pane
Windows Key + W
Open Search Settings
Windows Key + Z
Open App Bar
Arrow Keys
Select Metro Apps Left, Right, Up, Down
CTRL + Arrow Right
Move 1 Page Right on Metro UI Menu
CTRL + Arrow Left
Move 1 Page Left on Metro UI Menu
Arrow Key, ALT + Arrow Right
Move Metro App Right
Arrow Key, ALT + Arrow Left
Move Metro App Left
Arrow Key, ALT + Arrow Up
Move Metro App Up
Arrow Key, ALT + Arrow Down
Move Metro App Down
Windows Key + L
Lock Screen
Windows Key + E
Launch Windows Explorer on Classic Desktop
Windows Key + R
Launch Run Box on Classic Desktop
Windows Key + P
Projector Mode – Select Projector Output
Windows Key + U
Launch Ease of Access Center
Windows Key + T
Launch Classic Desktop with Arrow Key Icon Selection
Windows Key + X
Launch Windows Mobility Center on Classic Desktop
Windows Key + B
Launch Classic Desktop with Arrow Key Taskbar Icon Selection
Windows Key + M
Launch Classic Desktop with Arrow Key Desktop Icon Selection
Arrow Key, App Key
Display Unpin Option and Advanced Metro Icon Icon

Start Window ஐ எமது விருப்புக்கு ஏற்ப மாற்றியமைக்க.

Windows Key  ஐக் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவே Start Window ஆகும். இதில் All Programs, Control Panel, Recent Programs, My Computer Shortcuts…… போன்றன காணப்படும். இவ் Start Window மூலம் நாம் அடையவேண்டிய பகுதியை விரைவில் சென்றடையலாம். அதாவது Shortcutsஆகும். இதிலே எவ்வாறு எமக்கு வேண்டியபடி மாற்றங்களைச் செய்யலாம் என்று இப்பதிவின் மூலம்  பார்ப்போம்.

முதலில் Windows Key அல்லது Strat Button ஐக் கிளிக்செய்யவும். இப்போ Start Window ஆனது தோன்றும். இதன் உள்ளே வைத்து Right-Click செய்து தோன்றும் Propertise ஐ கிளிக் பண்ணவும்.



இப்போ கீழ் உள்ளவாறு புதிய விண்டோ ஒன்று தோன்றும். இதிலே Customize என்பதை கிளிக் பண்ணவும்.

இப்போ கீழ் உள்ளவாறு புதிய விண்டோ ஒன்று தோன்றும்.

இதிலே Start Window இல் தோன்றவேண்டியவை காணப்படும். இதிலே சில எவ்வாறான நிலையில் தோன்றவேண்டும் எனவும் இன்னும் சில தோன்றவேண்டுமா அல்லது இல்லையா என்பதை நாம் தெரிவுசெய்யவும் வேண்டும். அதாவது My Computer என்பது மூன்று தெரிவுகளாக உள்ளது. இதில் முதல் தெரிவை கொடுத்தால் Start Window இல் கீழ் உள்ளவாறு காணப்படும்.


இரண்டாவது தெரிவிக் கொடுத்தால் Start Window இல் கீழ் உள்ளவாறு காணப்படும்.
 

RUN, Recent Items என்பவை Start Window இல் தோன்றவேண்டுமெனின் அவற்றை தெரிவு செய்யவும்.

அத்துடன் Recent Programs எத்தனை வேண்டும் என்று கொடுக்க உங்களுக்கு விரும்பிய எண்ணைக் கொடுக்கவும்.



இப்போ உங்கள் விருப்பப்படி Start Window ஆனது மாற்றமடைந்திருக்கும்.

விண்டோஸ் 7 இல் Wallpapers களை எழுந்தமானமாக மாறச் செய்ய.


கணணியில் உள்ள Wallpaper ஐ நாம் நமக்கு விரும்பியவாறு போட்டுக்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக சிலர் ஒரே படத்தை தொடர்ந்து பார்த்து சலிப்புத் தட்டுவதால் அடிக்கடி மாற்றுவதுமுண்டு.
அப்படி அடிக்கடி மாற்றாமல் தன்னிச்சையாகவே படங்களை எவ்வாறு மாற்றமடையச் செய்யலாமென்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.

இதற்கு நீங்கள் முதலில் உங்களுக்கு விருப்பமான போட்டோக்களை தெரிவுசெய்து அவற்றை ஒரு Folder இல் இட்டு வேண்டிய இடத்தில் சேமித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் Desktop இன் ஏதாவதொரு இடத்தில் வைத்து Right-Clickசெய்யும்போது கீழ் உள்ளவாறு தோன்றும் விண்டோவில் காட்டிய“Personalize” என்பதை தெரிவுசெய்யவும்.


இப்போ தோன்றும் பக்கத்தில் கீழே படத்தில் வட்டமிட்டுக் காட்டியவாறு உள்ள“ Desktop Background” என்பதை கிளிக் செய்யவும்.


இப்போ தோன்றும் பக்கத்தில் இலக்கம் 01 இனால் காட்டப்பட்ட “Browse”என்பதை கிளிக்செய்து நீங்கள் சேமித்துவைத்துக்கொண்ட Folder இல் உள்ள படங்களை திறந்துகொள்ளவும்.



பின்னர் இலக்கம் 02 இனால் காட்டப்பட்ட “Select All “ என்பதைக் கொடுத்து அனைத்துப் படங்களையும் தெரிவுசெய்யவும்.

பின்னர் இலக்கம் 03 இனால் காட்டப்பட்ட “Picture Position”இல் “fill”என்பதைத் தெரிந்து இலக்கம் 04 இனால் காட்டப்பட்ட “Change Picture Every”என்பதில் ஒவ்வொரு படமும் எத்தனை நிமிடநேர இடைவெளியில் மாறிக்கொள்ளவேண்டுமென்பதைக் கொடுங்கள்.

பின்னர் இலக்கம் 05 இனால் காட்டப்பட்டதை தெரிவுசெய்தபின்னர் மாற்றங்களை சேமித்துக்கொள்ள வேண்டியதுதான்.

இப்போ உங்கள் விருப்பப்படி கணணியின் சுவர்ப்படங்கள் தானாகவே மாற்றமடைவதைக் காணலாம்....

Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவதற்கு...

நமது கணணியின் முன் திரையில் உள்ள மென்பொருட்களுக்கான Shortcut Icon இல் அம்புக்குறி ஒன்று இருப்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். இது சிலருக்கு வேண்டப்படாத ஒன்றாகக் கூட சிலவேளைகளில் அமையலாம். இது நீக்கப்பட்டால் நன்றாயிருக்குமென கூட சிலர் எண்ணியிருக்கலாம்.
எனவே அவ் அம்புக்குறி இருப்பதை விரும்பாதவர்களுக்காய் இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

இதற்கு முதலில் START இல் சென்று அங்கு தேடல் பகுதியில் “regedit”  எனக்கொடுத்து திறந்துகொள்ளவும். அல்லது START இல் சென்று RUN என்பதை கிளிக்செய்து “regedit” எனக்கொடுத்து திறந்துகொள்ளவும்.

பின்னர் இதிலே கீழ்காட்டிய ஒழுங்கில் சென்று “Explorer”” என்பதை அடையவும்.

 HKEY_CURRENT_USER\Software\ Microsoft\Windows\ CurrentVersion\Explorer


இப்போ மேலுள்ள படத்தில் காட்டியவாறு வலப்பக்கத்தில் உள்ள link என்பதை Right-Click செய்து Modify என்பதைக் கொடுத்து திறந்துகொள்ளவும். இப்போ விண்டோ ஒன்று திறக்கும் அதிலே கீழ் காட்டியவாறு இலக்கத்தை மாற்றியபின் OK பண்ணவும்.


இப்போ Shortcut Iconஇல் உள்ள அம்புக்குறியானது நீக்கப்பட்டுவிடும்.

தன்னிச்சையாகவே கணணித்திரை புதுப்பிக்க(Automatic Screen Refresh)

நீங்கள் உங்கள் கணணியில் உள்ள file system இல் மாற்றத்தை ஏற்படுத்தியபின்னர் அல்லது Explorer ஐப் பயன்படுத்துகின்ற போது மாற்றம் செய்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் F5 Key ஐ அழுத்தியோ அல்லது Right Clickசெய்து Refresh செய்யும்போதே நீங்கள் செய்த மாற்றத்தை அறிந்துகொள்ள முடியும். அவ்வாறில்லாமல் தன்னிச்சையாகவே எவ்வாறு Refresh செய்துகொள்ளலாம் என்று இப்பதிவூடாகப் பார்ப்போம்.


இதற்கு முதலில் Start Menu இல் சென்று RUN இல் “ regedit “ என்பதை கொடுத்து OK பண்ணுங்கள். இப்போ உங்களுக்கு கீழ் உள்ளவாறுRegistry Editor தோன்றியிருக்கும்.


இப்போ கீழ் காட்டிய ஒழுங்கில் Update வரை செல்லவும்.

HKEY_LOCAL_MACHINE\System\CurrentControlSet\Control\UpdateMode 

இப்போ வலது பக்கத்தில் உள்ள DWORD என்பதை கிளிக் செய்து அதில் உள்ள Data Value என்பதில் 1 இற்கும் 5 இற்கும் இடையில் விரும்பிய இலக்கத்தை  மாற்றியபின் சேமித்துக் கொள்ளவும். பின்னர் கணணியை மீளியக்கவும்.

அவ்வளவுந்தான். இனி ஏதும் மாற்றம் ஏற்படுத்தியபின்னர் தன்னிச்சையாகவே கணணித் திரையானது Refresh ஆகும்.

கூகிள்ளில் தமிழ் மற்றும் பல மொழிகளில் தட்டச்சு செய்ய ஒரு இலவச மென்பொருள்




ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற்ற கீழுள்ள படத்தை காணவும்

டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும் google tamil input