Monday, December 9, 2013

பேஸ்புக்கிலிருந்து வீடியோ, ஆடியோக்களை தரவிறக்கம் செய்ய


Facebook video, audio downloading software 

மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான  பேஸ்புக் தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள், ஆடியோக்கள் நாள்தோறும் பகிரப்படுகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் Upload செய்யப்பட்டு, அவற்றை நண்பர்களுக்கு பகிர்கிறார்கள். அதுபோன்று பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் நமக்குத் தேவையெனில் அவற்றை டவுன்லோட் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு தரவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகள் பேஸ்புக் தளத்தில் இல்லை. எனினும் மென்பொருளைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வீடியோ மற்றும் ஆடியோக்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
facebook video, audio downloading software
பொதுவாகவே இணையத்தில் வீடியோக்கள் ஸ்ட்ரீமிங் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதற்கு காரணம் இணைய இணைப்பு வேகம் குறைவாக இருப்பது. காணும் வீடியோ கோப்பின் தரம் மிகுதியாக இருப்பது. அதனால் வீடியோவை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு சிக்கல் ஏற்படும். இந்த சிக்கல்களுக்கு பேஸ்புக் தளமும் விதிவிலக்கல்ல.. பேஸ்புக்கிலும் இதுபோன்று வீடியோக்களை காண்பதில் சில நேரம் சிக்கல் உண்டாகும். இந்த சிக்கல்களை தீர்க்கவும், விரைவாக வீடியோ அல்லது ஆடியோவை (Download quick fast audio and video in Facebook) தரவிறக்கம் செய்யவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது.
மென்பொருளின் பெயர்   Bigasoft Facebook Downloader. பேஸ்புக் தளத்திற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இதைப் பயன்படுத்துவதும் எளிது. 
இந்த Bigasoft Facebook Downloader மென்பொருள் மூலம் பேஸ்புக் தளத்தில் உள்ள அனைத்து வகையான வீடியோக்களையும், அனைத்து வகையான ஆடியோக்களை தரவிறக்கம் செய்து, நமக்கு வேண்டிய பார்மட்டிற்கு (Format) மாற்றிக்கொள்ள முடியும். 
தரவிறக்கம் செய்யப்பட வேண்டிய பேஸ்புக் வீடியோக்களின் யூ.ஆர்.எல்..(URL) மென்பொருளில் உள்ளிட்டு, கீழ்நோக்கிய அம்புக்குறியுடன் கூடிய வட்டமான பட்டனை சொடுக்குவதன் மூலம் நீங்கள் விரும்பும் வீடியோ அல்லது ஆடியோ தரவிறக்கம் செய்யப்பட்டு, உங்களுடைய கணினியில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் கோப்புகள் சேமிக்கப்படும். பிறகு தேவையான நேரங்களில் அந்த வீடியோ அல்லது ஆடியோ கோப்புகளை இணைய இணைப்பு இல்லாமலேயே பார்த்து, கேட்டு மகிழலாம்.
இந்த facebook video, audio downloading software ஐ டவுன்லோட் செய்ய:
இது கட்டண மென்பொருளாகவும் கிடைக்கிறது. கட்டண மென்பொருளில் மேலதிக வசதிகள் உள்ளன.

No comments:

Post a Comment