Showing posts with label வன்பொருள். Show all posts
Showing posts with label வன்பொருள். Show all posts

Thursday, December 12, 2013

கணனி வன்பொருள் தகவள்



தற்காலத்தில் PC எனப்படும் Personal Computer-ஐ உபயோக்காதவர்களே இல்லை என சொல்லுமளவுக்கு இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் ஒரு முக்கியமான பாகம் Microprocessor ஆகும். மற்றும் இதில் Memory, Hard Disk, Modem போன்றவைகளும் உள்ளன. இந்த PC - 1970-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதை, Mr.Ed Roberts என்பவர் Intel-இன் Microprocessor-ஐ உபயோகித்து வடிவமைத்து அதற்கு Altair 8800 என்று பெயரிட்டு $395-க்கு விற்பனை செய்துவந்தார்.
சில வருடஙகளுக்குப் பிறகு Apple நிறுவனம், Apple II கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தபின் கம்ப்யூட்டரின் வளர்ச்சி அபரிமிதமாகையது. பிறகு, Commodore, Atari மற்றும் Texas Instruments கம்ப்யூட்டர் தயரிப்பில் ஈடுபட்டாலும், IBM, Apple நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் பின்வாங்கின.
ஆரம்பத்தில் மிகப்பெரியதாய் இருந்த இந்த PC தற்காலத்தில் உள்ளங்கை அளவிற்கு வந்துவிட்டது, இருந்தாலும், அடிப்படை தத்துவம் ஒன்றுதான்.

இப்போது, PC-இன் பல்வேறு பாகங்களைப் பார்ப்போம்,
Central Processing Unit (CPU) - இதை கம்ப்யூட்டரின் மூளை என்று சொன்னால் அது மிகையாகாது, இது Assembly Language-ஐ கொண்டு இயங்குகிறது, ஒரு கம்ப்யூட்டரின் அனைத்து செயல்களையும் இதுவே தீர்மானிக்கிறது.

Memory - இதில் இரண்டு வகைகள் உள்ளன, அவை :Random Access Memory (RAM) - இது ஒரு தற்காலிக Memory ஆகும். ஒரு கம்ப்யூட்டர் இயங்கும்போது, அதன் தகவல்களை தற்காலிகமாக சேமிக்க இது பயன்படுகிறது.

Read Only Memory (ROM) - இது ஒரு நிரந்தரவகை Memory ஆகும். கம்ப்யூட்டரின்
முக்கியமான தகவல்களை நிரந்தரமாக சேமிக்க இது பயன்படுகிறது.
Hard Disk - இதுவும் ஒரு நிரந்தரவகை Memory ஆகும், கம்ப்யூட்டரின்Operating System எனப்படும் இயங்குதளம் இதில்தான் நிறுவப்படுகிறது. இதைப்பற்றிய விளக்கமான பதிவு ஏற்கனவே இந்த வலைதளத்தில் உள்ளது.


Modem - இது உங்கள் கம்ப்யூட்டரை Internet - உடன் இணைக்கப்பயன்படுகிறது.Sound Card - இது உங்கள் கம்ப்யூட்டரில் இசையை கேட்கபயன்படுகிறது, இதனுடன் Speaker - ஐ இணைத்து பயன்படுத்தவேண்டும்.
Motherboard - இது ஒரு கம்ப்யூட்டரின் மிக மிக்கியமான பாகம் ஆகும், இதில்தான் மேலே சொல்லப்பட்ட CPU, Memory மற்றும் பிற பாகங்களான Hard Disk, Power Supply, Sound Card போன்றவை இணைக்கப்படுகின்றன.

இதைத்தவிர, Motherboard-இல் LAN Port, USB Port, Parallel Port, IDE Connector, SATA Connector போன்றவைகள் உள்ளன.





Hard Disk

Hard Disk என்பது கணினிகளில் உள்ள நிலையான நினைவகம். குறிப்பாக மேசைக்கணி, மடிக்கணி, குறுமடிக்கணி (net top), போன்ற கணினிகளில் கணினியைப் பயன்படுத்தத் தேவையான இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இதனை அழியா நினைவகம் (non-volatile memory) வகை என்றும், நிலை நினைவகம் என்றும் கூறுவர். இந்த வன்தட்டு நிலை நினைவகத்தில் (HDD) காந்தப் பூச்சுடைய வட்டமான தட்டுகளில் (Disk), 0,1 என்னும் Binary முறையில் தரவுகள் குறியேற்றப்பட்டு பதிவு (encode)
செய்யப்பட்டிருக்கும். இத் தட்டுகள் நிமிடத்திற்கு பல்லாயிரக்கணக்கான முறை சுழலவல்லது, எனவே எண்ணிமத் தரவுகளை இந்த காந்தப்பூச்சுள்ள வட்டைகளில் முறைப்படி விரைவாகப் பதிய வைக்கவும் (இதற்கு Write என்று பெயர்), ஏற்கனவே பதிந்துள்ளதை (எழுதியதை)ப் படிக்கவும் (Read) முடியும்.





வன்தட்டு நிலை நினைவகமத்தை (HDD) முதன்முதலாக, தனிமனிதப் பயன்பாட்டுக்கான மேசைக்கணினிகள் தோன்றும் முன்னரே 1956 இல் ஐபிஎம் (IBM) நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்தியது [1]). ஆனால் இன்று இத்தகைய வநிநிகள் கணினிகள் மட்டுமன்றி, எண்ணிம நிகழ்பட ஒளிப்படக் கருவி (digital video recorder) முதல் செல்பேசிகள் (அலைபேசி) வரை பல எண்ணிமக் கருவிகளும், அறிவியல் கருவிகளிலும் பயன்படுகின்றது.

இந்த Hard Disk 40 Pin கொண்ட IDE Cable மூலம் Mother Board இல் உள்ள IDE Solt இல் இணைக்கப்படும்.




இணைப்பு வாயில்களும் இணைப்புக்களும்.

கணனி ஒன்றினை பொறுத்தவரை அது பல வன்பொருட்களைஇணைத்து இயங்கக்கூடிய ஒரு சாதனம் என நாம் அறிவோம். ஆனால் ஒரு கணனியில் அவ்வளவு அதிகமான இணைப்பு வாயில்கள்(Ports) காணப்படுவதில்லை. தன்மையிலும், தொழிற்பாட்டிலும் வேறுபட்ட கணனியின் வெளி இணைப்பு மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு கணனியில் காணப்படும் சில இணைப்பு வாயில்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது இங்கு முக்கியமாகின்றது. அதற்கு நாம் கணனி ஒன்றில் காணப்படும் இணைப்பு வாயில்களின் வகைகள் மற்றும் அவற்றினூடாக கணனி... ஒன்றுடன் இணைக்கக் கூடிய சாதனங்கள் பற்றி அறிந்திருத்தல் இன்றியமையாதது ஆகின்றது.


ஒவ்வொரு இணைப்பு வாயில்கள் மூலமும் ஒரு வன்பொருள் சாதனம் கணனி மூலம் இணைக்கப்படுகின்றது எனின் அந்த இணைப்பின் ஊடாக இரண்டு விதமான செயன்முறைகள் நடைபெறும். ஒன்று தரவுகளின் கடத்தல், மற்றையது

இணைக்கப்பட்டுள்ள இலத்திரனியல்சாதனத்துக்கான மின் கடத்தல் என்பதாகும். பொதுவாக இவ்வகையில் உபயோகிக்கப்படும் இணைப்பான் மற்றும் இணைப்பு வாயில்கள் அவற்றின் PIN வடிவமைப்புக்களை பொறுத்து ஆண், பெண் என பிரிக்கப்படுவதுண்டு. PIN களை வெளியே தெரியும் படியாக கொண்டிருக்கும்இணைப்பான்கள்மற்றும் செருகிகள் ஆண்(Male Port)இ எனவும் PIN களை செலுத்தக் கூடியதாக அமைந்துள்ள செருகி(sockets) வடிவமைப்பில் உள்ளவை பெண்(Female Port) எனவும் அளைக்கப்படும்.


இரண்டுவகையான மரபுமுறையான இணைப்பான்கள் காணப்படுகின்றன. அவை அவற்றின் முக்கியத்துவம் கருதி இன்றும் நவீன கணனிகளில் தொடர்கின்றது. Serial ports and parallel ports என்பவை அவையாகும். இவை இரண்டும் ஆங்கில எழுத்தான D வடிவில் அமைந்தவை. அதாவது ஒழுங்கீனமான இணைப்புக்களை தவிர்ப்பதற்கும், சரியான இணைப்பு முறையினை இலகுபடுத்துவதற்கும் இந்தவடிவம் துணைசெய்தது. அதனால் இவ்வகை இணைப்பான்கள் (connectors) பல தொழில்நுட்பவியலாளர்களினால் DB என்றோ அல்லது D-subminiature என்றோ 
அழைக்கப்படுகின்றன. Serial ports வழமையாக 9 மற்றும் 25 PINs கொண்டவையாக காணப்படலாம். இதில் 9 Pஐளே கொண்டவையில் 5 மேற் புறமாகவும் மிகுதி நான்கு கீழ்ப்புறமாகவும் அமைந்து காணப்படும்.


அதே போல் 25 PINs கொண்டதில் 13 மேற்புறமாக அமைந்திருக்கும். இவ்வகை இணைப்புக்களின் மூலம் 1bit தரவுகளேஒரு நேரத்தில் பரிமாறப்பட்டன. இது இன்றைய கணனி உலகின் மிகக்குறைந்த தரவுப்பரிமாற்ற அளவு. அத்துடன் ஒரு வினாடிக்கு 115 115 kilobits (Kbps) வேகத்தில் தரவுகளை கடத்தின. இவ்வகையான களின் துணையுடன் ஒரு கணனியில் mice, external modems, label printers, personal digital assistants (PDAs), and digital cameras போன்ற சாதனங்களின் பயன்பாடுகளை ஒரு கணனியின் வாயிலாக பெறுவதற்கு சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்கப்பட்டது.


Parallel ports இவை 25 pin களை கொண்டவை மேல்வரிசையில் 13 ம் கீள் வரிவையில் 12 அமைந்து காணப்படும். ஆரம்பகாலங்களில் வந்த கணனிகளில் Parallel ports எனப்படும் இவற்றின் பயன்பாடுகள் அதிகம் என்பதனால் இவை அதில் முக்கியத்துவம் பெற்றன. Parallel ports என்பதனை இலகுவாக printer ports எனவும் விளங்கிக் கொள்ளலாம். ஆரம்ப காலங்களில் அவை அதற்கே அதிகமாக பயன்படுத்தப்பட்டதனால் காலப்போக்கில் அந்த பெயரும் அதற்கு உருவாகியது. எப்படியிருந்தபோதும் Parallel ports களில் external CD-ROM drives, Zip drives, and scanners போன்ற ஏனைய வெளியிணைப்பு வன்பொருட்களையும் இணைத்து பயன்படுத்த முடியும் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கணனியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)
 இவ்வாறான தற்காலிக சேமிப்பகங்கள்(RAM -Random Access Memory) ஓர் கணனியில் அதன் நிரந்தர சேமிப்பகங்களை(Hard disk) காட்டிலும் 1000 மடங்கு வேகத்தில் செயற்படக்கூடியன. கணனித் திரையில் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேலைகளும் இச் சேமிப்பகத்தில் தற்காலிகமாக சேமிக்கப்பட்டே கணனியில் வேலைகள் நடைபெறுவதற்கான அறுவுறுத்தல்கள் மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு (CPU) அனுப்பப்படுகின்றன. பொதுவாக இத்தற்காலிக சேமிப்பகம் ( RAM) தற்போது கணனியில்... நடைபெறுகின்ற அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக தன்னகத்தே சேமித்து வைத்திருக்கும். கணனியின் தற்காலிக சேமிப்பகம் (Random Access Memory - RAM) ஓர் கணனியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் அளவிற்கு முக்கியம் வாய்ந்ததாகும். இது இரண்டு முறைகளில் முக்கியம் பெறுகின்றது.


ஓர் கணனியின் தற்காலிக சேமிப்பகம் எவ்வளவு கொள்ளவினை கொண்டிருக்கின்றது? என்பது ஒன்று மற்றையது அது எவ்வளவு வேகத்தில் தொழிற்படுகின்றது என்பதாகும். இவ்விரண்டும் ஓர் கணனியில் உள்ள தற்காலிக சேமிப்பகத்தில் திருப்திகரமாக இருத்தல் ஓர் கணனியின் வேகத்தினை அதிகரிப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றினை அக்கணனி பெற்றுள்ளது என கொள்ளலாம். ஒர் கணனியின் தற்காலிக சேமிப்பகத்தின் வேகம் அதன் கொள்ளவின் முக்கியத்தும் போன்று அவ்வளவிற்கு அவசியமானதாகபார்க்கப்படுவதில்லை.



கணனிக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் யாவும் நேரடியாக கணனியின் மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு அனுப்பப்படுவதில்லை. அவை முதலில் தற்காலிக செமிப்பகத்திற்கே எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கிருந்தே பின்னர் ஏனைய இடங்களுக்கு அனுப்பும் செயல்முறைகள் நடைபெறுகின்றன. தற்காலிக சேமிப்பகம் மற்றும் இரண்டாம் நிலை

அல்லது நிரந்தர சேமிப்பகம் என கணனியில் இரண்டு வைகையான சேமிப்பகங்கள் காணப்படும். ஓர் கணனியின் நிரந்தர சேமிப்பகத்தில் உள்ளவிடையங்களைஅக்கணனியின் மத்திய செயற்பாட்டுப்பகுதி புரிந்து கொள்வதில்லை. அதனால் அவை தற்காலிக சேமிப்பகத்திற்கு கொண்டுவரப்பட்டுபின்னரேயே மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு அனுப்பப்படுகின்றது.


ஒர் கணனியில் குறைந்தளவான தற்காலிக சேமிப்பகம் காணப்படுமானால் அங்கே பல வேலைகளுக்கான மென்பொருள்கள் ஒரே நேரத்தில் இயங்குவதற்கான இடம் பற்றாக்குறை ஏற்படக்கூடும். அந்தவேளையில் "pயபiபெ" ழச "ளறயிpin" போன்ற செய்திகளை கணனி திரையில் பிரதிபலிக்கும். ஒர் கணனியின் தற்காலிக சேமிப்பகம் அதிகளவானகொள்ளவினை கொண்டிருப்பது சிறந்தது.



அத்துடன் அது கணனியின் ஏனைய பாகங்களுடன் இசைவானதாகவும் இருப்பது இன்றியமையாதது ஆகும். உதாரணமாகceleron, p1, p2, p3,p4, a.m.d மத்திய செயற்பாட்டு மையங்களை உடைய கணனிகளில் RAM 512 MB உடன் நன்றாகஇயங்கக்கூடியவை. இந்த இடத்தில் கணனி விளையாட்டுக்களை நிறுவியுள்ள ஓர் கணனி எனில் அது இந்த அளவினை காட்டிலும் சற்று அதிகமான தற்காலிக செமிப்பகங்களை கொண்டிருப்பதும் விரும்பத்தக்கது. அடிப்படையில் ஓர்கணனியின் தற்காலிக சேமிப்பகங்களை ஒவ்வோர் இயங்குதளங்களுக்கும்ஏற்றவகையில் நிறுவிக்கொள்ளலாம்.

Monday, December 9, 2013

வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க


தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்  ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

  • நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
  • சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

இந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repair ஆகாது..!

கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆவதிலிருந்து நீங்களே தடுக்கலாம். 
எல்லாமே நாம பயன்படுத்துற விதத்துலதாங்க இருக்கு..
உங்களுக்கு கம்பஃயூட்டர் பத்தி ஒன்னுமே தெரியாதுன்னாலும் பரவாயில்லை.. சில அடிப்படை விஷயங்களை மட்டும் தவறாம ஃபாலோ பண்ணினா உங்களோட கம்ப்யூட்டர் ரிப்பேரே ஆகாது. 
என்ன செய்யணும்? வாங்க பார்க்கலாம். 

CPU சுத்தம்: 

1. கம்ப்யூட்டருக்கு முக்கியமானது CPU. இந்த சிபியூவை மட்டும் நல்லா பராமரிச்சாப் போதுங்க... கண்டிப்பா கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிறதிலிருந்து தடுத்திடலாம். 
2. இதை சுத்தமா வைச்சிருக்கிறது நம்மளோட கடமை. தூசி துப்பு அண்டாம வச்சிருக்கணும். தூசிகளை அண்ட விட்டா அது சிபியூக்குள்ள இருக்கிற நுணுக்கமான பகுதிகள்ல புகுந்து ரிப்பேர் செய்திடும்.
3. குறிப்பா கம்ப்யூட்டர் ஹீட் ஆகாமல் இருக்கிறதுக்காக உள்ளே வச்சிருக்கிற சின்ன சின்ன பேன்களில் தூசிகள் ஒட்டுச்சுன்னா....அதோட வேகம்  குறைஞ்சிடும். அதனால் அந்த பேன் நல்லாவே சுத்தாதுங்க...அப்படி சுத்தலேன்னா.... சிபியுவோட ஹீட் வெளியில வராம உள்ளேயே இருக்கும். அதனால் சிபியு அதிகம் ஹீட் ஆகிடும். 
4. எந்த பொருளுக்கும் ஹீட்னாலே ஆபத்துதாங்க..அதுவும் எலக்ட்ரானிக் ஐட்டங்கள்னா சொல்லவே தேவையிலை...
தீர்வு: நல்ல சுத்தமான கம்ப்யூட்டர் சுத்தம் பன்ற பிரஸ் (Computer Cleaning brush) வச்சு சுத்தம் செய்யலாம். இல்லேன்னா சைக்கிளுக்கு காத்தடிக்கிற பம்ப் வச்சு சிபியு மூடிய கழட்டிட்டு காத்தடிக்கலாம். தூசி துப்பு அதிகம் இருக்கிற பகுதிகள்ல இந்த மாதிரி செஞ்சா எல்லா தூசுகளும் வெளியில பறந்திடும். 

KeyBoard சுத்தம்: 

அடுத்து முக்கியமானதா பார்க்கப்போனால் நாம் எப்பவுமே பயன்படுத்துற கீபோர்ட்தாங்க.. இந்த கீபோர்ட் எப்படி செயல்படுத்துன்னு நம்ம "தங்கம்பழனி" சார் "தொழில்நுட்பம்" தளத்துல எழுதியிருக்காருங்க..அதையும் படிச்சுப்பாருங்க...
1. இந்த கீபோர்டை நாம் அடிக்கடி பயன்படுத்தறோமே தவிர, அதை சுத்தம் செய்றது கிடையாது... கீபோர்ட் பட்டன்கள்ல இருக்கிற தூசிகளை துடைக்கிறதே இல்லை.
2. எப்பவாது எதையாவது சாப்பிட்டுகிட்டே கம்ப்யூட்டர யூஸ் பண்ணினால், அந்த உணவு துணுக்கள் கீபோர்ட்ல ஒட்டிக்கும்... குறிப்பா டீ, காபி குடிச்சோம்னா ப்பித் தவறி கீபோர்ட்ல பட்டுடுச்சு கவனிக்காம விட்டால் அவ்வளவுதான். அந்த கீ அப்படியே ஒட்டிக்கும்...அல்லது அதுல நிறைய பசைத் தன்மை ஏற்பட்டுடும்... 
3. அதனால ஒரு தடவை அந்த கீயை அழுத்தினால் அது ஒட்டிக்கும்.. தொடர்ந்து அந்த எழுத்து ஸ்கீரீன் வந்துட்டே இருக்கும்.. என்னவோ ஏதோன்னு பயந்திடுவோம்...அப்புறம் பார்த்தால் அந்த கீ அழுத்தின பொசிசன்லேயே இருக்கும்... 
4. கீபோர்ட் இடுக்குல அழுக்குகளைப் போக்க கீபோர்டை அப்படியே தலைகீழா கவிழ்த்து இலேசா நாலு தட்டு தட்டுங்க... நீங்க எதிர்ப்பார்க்க குப்பைகளும், தூசிகளும அதலிருந்து கொட்டும்.. 
தீர்வு: இதேலேயும் காத்தடிக்கிற பம்ப் யூஸ் பண்ணி தூசிகளைப் போக்கலாம். மெல்லிசா இருக்கிற துணியை இலேசா தண்ணில ஒத்தி கீபோர்ட் முழுசும் துடைச்சி எடுக்கலாம்.. இப்போ பாருங்க... உங்களோட கீபோர்ட் அழுக்கில்லாம "பளிச்"ன்னு மின்னும்.

Mouse சுத்தம்:

நாம அடிக்கடி பயன்படுத்துற மற்றொரு கம்ப்யூட்டர் துணை சாதனம் மௌஸ். இந்த மௌசை அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டி வைக்கிறதுலயும், கிளிக் பன்றதுலயும் செலுத்துற கவனம்.. அதுக்கு அடியில ஏற்படுகிற அழுக்குப் படிவு, பட்டன்களுக்கிடையே உள்ள தூசி, துப்புகள் மீது நமக்குப் போகவே போகாதுங்க.. மௌஸ் ஒர்க் ஆனால் போதும்..மற்றதெல்லாம் நமக்கு எதுக்குங்கிற அஜாக்கிரதைதான் அதுக்கு காரணம்.

இப்போ இருக்கிற மௌஸ்...புது மௌஸ் மாதிரியே மாத்த முடியும். புது மௌஸ் யூஸ் பன்னபோது இருக்கிற அந்த அனுபவம் மறுபடியும் உங்களுக்கு கிடைக்கனும்னா மௌசையும் அதே மாதிரி சுத்தம் பண்ணுங்க...மௌசோட மேல்பகுதி, கீழ்பகுதின்னு மெல்லிசான துணியை ஈரப்படுத்தி துடைச்செடுங்க.. "Air Bump" வச்சும் சுத்தப்படுத்தலாம். 

Screen சுத்தம்: 

அதே மாதிரி நமக்கு காட்சியைக் கொடுக்கிற Computer Screen. இதை பெரும்பாலானவர்கள் துடைச்சிதான் வச்சிருப்பாங்க... அவசர அவசரமா துடைப்பாங்க.. நடுப் பகுதி மட்டும் சுத்தமா இருக்கும், மற்ற பகுதிகள் அழுக்காகவும் சுத்தமில்லாமலும் இருக்கும்.  ஸ்கிரீனோட ஓரப்பகுதிகளை நல்லா சுத்தமா துடைச்சி வைக்கலாம்.. மெல்லிசா இருக்கிற "வெல்வெட்"துணிகள் மாதிரி இருக்கிறதை வச்சு துடைச்சா ஸ்கிரீன்ல கீரல் விழாம இருக்கும்...
இதையெல்லோம் தொடர்ந்து, அட்லீஸ்ட் வாரம் ஒரு தடவையாவதுத செய்தால் கண்டிப்பா உங்களோட கம்ப்யூட்டர் ரீப்பேரே ஆகாதுங்க. இந்த டிப்ஸ் எல்லாமே பிசிகலா வர்ற ரிப்பேரை மட்டும் தடுக்குங்க.....

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி?


Remove Write Protection on USB drives
பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது சில நேரம் கீழ்க்கண்ட பிழைச்செய்தியைக் காட்டும்.

"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk" 

என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்கு வைரஸ் பிரச்சினை உட்பட பல காரணங்கள் இருக்கின்றன. இதனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.


எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.




reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு மறுபடியும் பென் டிரைவை சொருகி சரிபார்க்கவும்.  இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்து வைக்க வேண்டும் எனில் கீழே உள்ள நிரலை மேற்கண்டவாறு Run Box இல் கொடுத்து எண்டர் தட்டவும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

Sunday, December 8, 2013

பென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்

பென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்

பென்ட்ரைவ் என்பது இப்பொழுது கணினி   உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருள் இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணினியில் பதியவோ உபயோகபடுத்த படுகிறது. இந்த பென்ட்ரைவ்கள் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணினிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. இதிலிருந்து நம் பென்ட்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்களை கீழே கொடுத்துள்ளேன்.
1. USB WRITE PROTECTOR :
 இந்த மென்பொருள் உங்களுடைய பென்ட்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால் உங்கள் பென்ட்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த 
பென்ட்ரைவ்களை கண்டறிய முடியவில்லை. இந்த மென்பொருள் மிக சிறிய அளவே(190KB) உடையது.


2. USB FIREWALL :
  பென்ட்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். USBயில் இருந்து கணினிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன் படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணினியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும். ஏதேனும்  வைரஸ் உங்கள் கணினியில் புக முயற்சிக்கும் போது இந்த இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. நன்றாக வேலை செய்கிறது. 


3. PANDA USB VACCINATION TOOL :
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf பைலை முற்றிலுமாக தடைசெய்கிறது. உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கபடுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சார்ட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

4. USB GUARDIAN :
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான பைலை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.

http://www.usb-guardian.com/

மேலே கூறிய நான்கு மென்பொருட்களும் உங்கள் பென்ட்ரைவை பாதுகாக்க உதவுகின்றன. தரவிறக்கி கொள்ளுங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

Saturday, December 7, 2013

பென் டிரைவ் (Pen Drive)

பென் டிரைவ் (Pen Drive) – தெரியாத தகவல்

USBஎன்பதன் விரிவாக்கம் Universal Serial Bus என்பதன் சுருக் கமே ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவ ல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Discதான் இந்த பென்டிரைவ். இந்த USB என்று சொல்லக்கூடிய Pen drive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்ப டுத்துவது எப்படி எனப் பார்
ப்போம்.
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடு த்துப் பாதுகாப்பதால் நம்முடைய கோப்புகள், தகவல்கள் களவு போகா மல் பாதுகாக்க லாம். வேறு ஒருவர் பயன்படுத்தவதை தடுக்க முடியும்.
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடு ப்பது எப்படி?
பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுக்க பல மென்பொருள்க ள் இருக்கின்றன. இதில் Usb Flash Sequrity என்ற இந்த மென் பொருளைப்பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி எனப்பார்ப்போம் .
அளவில் சிறிய இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக் கொ ள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி: Usb Flash Sequrity
இந்த தளத்திலேயே மென்பொருள் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.
மென்பொருளில் உங்கள் பிளாஸ் டிரைவை(USB) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளு ங்கள்.
பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைக்கும்போது UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இரண்டு கோப்புகள் மட்டுமே கண்ணுக்குத்தெரியும். அதில் UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இருகோப்புக ளில் UsbEnter.exe என்ற கோப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து மீண்டும் உங்க ள் பென்டிரைவை திறந்து பயன்படுத்த லாம்.
பிளாப்பி(Floppy) பற்றி கேள்விப்பட்டிரு ப்பீர்கள். அதற்கு பதிலாக இக்காலத்தி ல் பயன்படுபவைகள் இந்த Flash Drive or pendrive or Usb. இவை எந்தளவுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதோ, அந்தள வுக்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடியவை. அதாவது யாரி டமிருந்தும்(கணினி) வைரஸ் வந்தாலும் பெற்றுக்கொண்டு உடனே அதை நம்முடைய கணினிக்கு பரப்பிவிடும் செயலை ச் செய்துவிடும். ஆகவே வைரஸ் சாப்ட்வேர் மூலம் சோதனை செ ய்து கொள்வது நல்லது.
USB-இதிலுள்ள தகவல்களை பாதுகாக்கவும், இதன் ஆயுட்கால த்தை அதிகரிப்பதற்கும் உதவ ஒரு மென்பொருள் உண்டு.
மேற்கண்ட சுட்டியின்வழிசென்று  Install wizard என்பதை சொடுக்கி மென்பொருளை இலவச மாக தரவிறக்கிக் கொள் ளுங்கள்.
இதில் போர்ட்டபிள் வெர்சனும் உள்ள து. தேவையெனில் Portable version-ஐ தரவிறக்கிக்கொள்ளலாம். மென்பொ ருளை தரவிறக்கி நிறுவியவுடன் Task Bar-ல் USB alert செய்திப்படம்காட்டும்.
இம்மென்பொருள் Windows XP, Windows Vista (32 / 64 bit), Windows 7 (32 / 64 bit) இயங்குதளங்களில் ஆதரி க்கும் வகை யில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக நாம் பென்டிரைவ் கணினியில் இணைத்தவுடன் அலர்ட் மெஜேஸ் வருமல்லவா? அதைப்போன்றே இம்மென் பொ ருளை நிறுவியவுடனும் அலர்ட் மெசேஜ் வரும். பிறகு அந்த ஐ கானை சொடுக்கி Eject என்பதை கிளிக் செய்து பென் டிரைவ் கணி னியிலிருந்து நீங்கிவிடலாம்.
ஒவ்வொரு முறையும் USB Pendrive இந்த முறையில் எடுக்கு ம்போது பென்டிரைவ் பாதுகாப்பாக நீங்குவதோடு, சேமிக்கப் பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்