Showing posts with label Mobile Phones. Show all posts
Showing posts with label Mobile Phones. Show all posts

Wednesday, February 12, 2014

இலவசமாக Call மற்றும் Message செய்ய உதவும் Line Application



Line
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் இலவச Message அல்லது Call செய்யும் Application களை பயன்படுத்துவார்கள். பெரும்பாலான Application கள் இவற்றில் ஏதேனும் ஒரு வசதியை மட்டுமே பயனர்களுக்கு வழங்கும். அப்படி இல்லாமல் இரண்டையும் தரும் ஒரு பயனுள்ள Application பற்றி இன்று பார்ப்போம்.
Line என்ற இந்த Application மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்களுடன் நீங்கள் பேசலாம் அல்லது இலவசமாக மெசேஜ் செய்யலாம். எந்தவிதமான ஒரு லிமிட்டேஷனும் இல்லாமல் 24 மணி நேரமும் இதை செய்யும் வசதியை Line Application உங்களுக்கு வழங்குகிறது. உலகம் முழுவதும் 15 கோடி பயனர்கள் இந்த Application ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.
free call and message
நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் Offline – இல் உள்ளார் என்றால் நீங்கள் விஷயத்தை பேசி ரெகார்ட் செய்து அனுப்பலாம். வீடியோ/ஆடியோ என இரண்டு வகையிலும் செய்ய முடியும்.
இது எல்லா Smartphone க்கும் உள்ளது. அத்தோடு Windows மற்றும் Mac கணினிகளிலும் இதை நீங்கள் பயன்படுத்த முடியும்.  உங்கள் போனில் இதை இன்ஸ்டால் செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொண்டால் உங்கள் கணினியில் இருந்தே நண்பர்களுக்கு call செய்யலாம்.
இவற்றோடு புதிய Status, Photos போன்றவற்றை Timeline என்ற பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பகுதி Social Network போல இயங்கும்.
இதற்கெல்லாம் ஒரே தேவை உங்கள் நீங்களும் உங்கள் நண்பரும் Line – ஐ பயன்படுத்த வேண்டும். அத்தோடு இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
சிறப்பம்சங்கள்: 
  • இலவசமாக Call செய்யும் வசதி. 
  • மிக வேகமான செயல்பாடு. ஒரு சில நொடிகளில் Call/Message சென்றடைகிறது.
  • Chat மூலம் படங்கள், ஆடியோ, வீடியோ அனுப்பும் வசதி
  • Group Chat வசதி
  • கணினிகளிலும் இயங்கும் வசதி
  • முழுக்க முழுக்க இலவசம்.
voice and video message
Android பயனர்கள்: 
முதலில் Line Application பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் Install என்பதை கிளிக் செய்யுங்கள். ஏற்கனவே Google Play தளத்தில் உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Sign in ஆகி இருந்தால் அடுத்தும் Install என்று கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் போனில் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து Sign in செய்து பின்னர் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்யுங்கள்.  இப்போது உங்கள் போனில் GPRS/Wifi – ஐ Enable செய்தால் App தானாக Download ஆகிவிடும். உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆன பிறகு உங்கள் நம்பர் கொடுத்து உங்கள் Line கணக்கை தொடங்கி விடலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமும் Register செய்து கொள்ளலாம்.
Windows Phone, iPhone, Blackberry மற்றும் Nokia Asha பயனர்கள்:
உங்கள் போனில் App Market சென்று Line என்று தேடி டவுன்லோட் செய்யுங்கள் பின்னர் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்து Register செய்யுங்கள்.
தரவிறக்க:
  • மொபைல்
    • Android [**Android பயனர்கள்இந்த இணைப்பில் கிளிக் செய்து வரும் பக்கத்தில் Install என்பதை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் போனில் GPRS/Wifi - ஐ Enable செய்து தானாக Download செய்யலாம்**]
    • iPhone
    • Windows Phone 8
    • Blackberry
    • Nokia Asha
டவுன்லோட் செய்து பயன்படுத்துபவர்கள் More >> Add Friends மூலம் புதிய நண்பர்களை சேர்க்கலாம். 

Thursday, December 19, 2013

மொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற


மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்றுவது எப்படி? என்று ஒரு இடுகை எழுதி இருந்தேன். படித்திருப்பீர்கள். தற்போது வீடியோ எடுக்கும் வசதி இன்றி வரும் மொபைல் போன்கள் குறைவு. உயர் தரத்தில் HD வீடியோ எடுக்கும் அளவுக்கு கூட மொபைல் போன்கள் சந்தைக்கு வந்து விட்டன.

சாதரணமாக மொபைலில் எடுக்கும் வீடியோக்களை கணினிக்கு மாற்றி பின்பு யூடியுபிற்கு மாற்று பழகி இருப்போம். இப்போது மொபைலில் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் மொபைலில் இருந்தே யூடியுபில் ஏற்றுவது எப்படி என்று பார்ப்போம். இதுவும் எளிதான ஒன்றுதான்.

இதற்கு தேவையானவை

1. யூடியுபில் ஒரு பயனர் கணக்கு
2. கேமரா வசதி உள்ள மொபைல் போன்
3. மின்னஞ்சல் அனுப்ப மொபைலில் இணைய வசதி

இந்த http://www.youtube.com/account சுட்டியை கிளிக் செய்து யூடியுபில் உங்கள் பயனர் கணக்கு பக்கத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே 'Mobile Setup' என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட ஈமெயில் முகவரியை அளிக்கும்.


அதை குறித்து வைத்து கொண்டு உங்கள் மொபைல் தொடர்புகளில்(Contacts) சேமித்து கொள்ளுங்கள்.

இனி மொபைலில் வீடியோக்கள் பகுதிக்கு சென்று கொள்ளுங்கள். அதில் வீடியோக்களை  பார்க்கும் போது 'Send' என்று ஒரு வசதி இருக்கும். அதனை அழுத்தினால் ஈமெயில் மூலம் வீடியோவை அனுப்புவதற்கான வசதி வரும். அதன் மூலம் நீங்கள் யூடியுபில் இருந்து பெற்ற ரகசிய ஈமெயில் முகவரிக்கு வீடியோவை அனுப்பி விடுங்கள். உங்கள் வீடியோவில் அளவை பொறுத்து நேரம் பிடிக்கும்.

இப்போது நீங்கள் அனுப்பிய வீடியோ உங்கள் யூடியுப் கணக்கில் தானாக ஏற்றப்பட்டு இருக்கும். நீங்கள் அனுப்பும் ஈமெயிலில் Subject பகுதியில் கொடுப்பது வீடியோவுக்கான தலைப்பாக வரும்.

இதன் மூலம் நீங்கள் செல்லுமிடமெல்லாம் எடுக்கும் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்றி உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்

மொபைல் வீடியோவை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப


சுற்றுலா, பிறந்தநாள், விழாக்கள் போன்றவற்றிற்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியை மொபைலில் பதிவு செய்து உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து வந்திருப்போம். மிக வேகமான பகிர்தலுக்கு இணையம் நல்ல ஊடகமாகவே நமக்கு பயன்பட்டு இருக்கிறது.

மொபைலில் எடுக்கும் புகைப்படங்கள்வீடியோக்களைஉடனுக்குடன் இணையத்தில் ஏற்றுவது பற்றி ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைலில் எடுக்கும் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புவது எப்படி? என்று இப்போது பார்ப்போம்.

இது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. இதற்கு தேவை கேமரா வசதி உள்ள மொபைல் உள்ள போன், மொபைலில் நல்ல வேகமான (3G or Wifi) இணைய இணைப்பு. இதனை சிறப்பாக செய்வதற்கு இணையத்தில் Qik எனும் இணையதளம் சிறப்பான சேவை வழங்குகிறது.

Qik.com சென்று பயனர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள். நீங்கள் பேஸ்புக், டிவிட்டர் பயனராக இருந்தால் அதனை உபயோகித்து Qik -ல் பயனராகி கொள்ள முடியும். அடுத்து அவர்கள் வழங்கும் சிறிய மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ள வேண்டும். எந்தெந்த மொபைல் மாடல்கள் சப்போர்ட் செய்யபடுகிறது என்பதனை இந்த சுட்டியில் காணவும். உங்கள் மொபைல் அந்த பட்டியலில் இருந்தால் மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.


இந்த மென்பொருளை உபயோகித்து நீங்கள் எடுக்கும் மொபைல் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புங்கள். வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு Qik இணையதளத்தில் ஒளிபரப்பப்படும், சேமிக்கப்படும். உங்கள் ஒளிபரப்பு அனைவரும் பார்க்கும்வண்ணம் பப்ளிக் ஆக அமைந்து இருக்கும். அதனை நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் பார்க்கும்படி பிரைவேட் ஆக அமைத்து கொள்ளும் வசதியும் உண்டு.

Qik -ல் சேமிக்கப்படும் உங்கள் வீடியோக்களை நீங்கள் பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் போன்ற சமூக தளங்களில் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பிளாக்குகளில் Embed செய்தும் கொள்ளலாம். Qik பயனர்களின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களையும், சேமிக்க பட்டவற்றையும்இந்த சுட்டியில் காணுங்கள். மொபைல் உபயோகிப்பாளர்கள் இடையே இந்த இணைய சேவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Saturday, December 14, 2013

தமிழ் குர்ஆன் APPLE மென்பொருள் டவுன்லோட் செய்ய



iPhone Screenshot 1


திருக்குர் ஆன் தமிழாக்கம்  மென்பொருள் APPLE போனில் பதிவிறக்க 
பிஜே அவர்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் பத்தாவது பதிப்பின் அடிப்படையில்  iPhone அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை இலவசமாக ஆப்பிள் App Store லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
குறிப்பு: தற்போது வெளியாகியுள்ள எமது அப்ளிகேஷனில் விளக்க குறிப்புகளை பார்க்க இயலாது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ், குறிப்புகளை பார்வையிடும் வசதி  விரைவில் செய்யப்படும்.
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த குறைந்தது iOS 5 உங்கள் iPhone ல் இருக்க வேண்டும்.
இந்த அப்ளிகேஷன் iPod Touch மற்றும் iPad லும் வேலை செய்யும்.
இந்த அப்ளிகேஷனை கீழ்க்காணும் வழிமுறைகளில் பதிவிறக்கம் செய்யலாம்:
1. TamilQur'an என்று App Store ல் தேடி பெறலாம்.

அல்லது கீழ்க்காணும் லிங்கை iPhone/iPod Touch/iPad ல் சொடுக்கி பெறலாம்.

முக்கியக்குறிப்பு : இந்த  தகவல்கள் www.onlinepj.com பக்கங்களிலிருந்து பெறப்பட்டது.அனைவரும் தெறிந்துக்கொள்வதற்க்காக இந்தப்பக்கத்தில் வெளியிட்டேன். நன்றி.

OPERA MOBILE v12. அதாவது NOKIA SYMBIAN (s60v3) யில் எவ்வாறு தமிழ் படிக்க மற்றும் COPY PASTE செய்வது என்று பார்போம்.



பரவலாக உங்கள் அனைவருக்கும் OPERAMINI யில் தமிழ் FONT எவ்வாறு ஓபன் செய்து படிக்க வேண்டும் என்பது தெரிந்திருக்கும். 

ஆனால் இங்கு நான் கூற இருப்பது OPERA MOBILE v12. அதாவது NOKIA SYMBIAN (s60v3) யில் எவ்வாறு தமிழ் படிக்க மற்றும் COPY PASTE செய்வது என்று பார்போம்.


கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Akshar True Type Font ஐ டவுன்லோடு செய்து அதனை உங்களது மொபைலில் உள்ள OTHERS எனும் FOLDER ல் SAVE செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் நீங்கள் ஒவ்வொரு முறை உங்களது மொபைலில் OPERA MOBILE v12 ஐ ஓபன் செய்யும் பொழுதும் உங்களுக்கு தமிழ் மொழி disaplay ஆகும் , மற்றும் நீங்கள் தேவை பட்டதை COPY PASTE ம் செய்து கொள்ளலாம். இது கணினி பயன்படுத்த வசதி இல்லாத நண்பர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்....


Opera Mobile Download Link (choose opera mobile 12 (s60) and click download):http://operamini.com/mobile/download/versions/

Font Download Link : http://tamil.changathi.com/Download.aspx

You tube வீடியோவை கைபேசியில் பதிவிறகுவது எப்படி ?



வீடியோ உலகின் முன்னணி தளமான YOU TUBE தளத்தில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் வீடியோக்கள் UPLOAD செய்ய படுகிறது .இந்த YOU TUBE வீடியோவை மொபைலில் பதிவிறக்க பலத்தளங்கள் இருந்தாலும் ஒரு சிறந்த தளம் TUBE ZEN தளமாகும் . புதிதாக இன்று UPLOAD செய்யப்பட்ட வீடியோவாக இருந்தாலும் உடனே அந்த வீடியோவை உங்களுக்கு தரும் ஒரு அருமையான தளம் . இந்த தளத்தில் உள்ள ஒரு சிறப்பு என்ன வென்றால் MP4,3GP HIGH ,3GP MED 3GP LOW ,MP3 ,ஆகிய FORMETக்களில் உங்களுக்கு வீடியோவை தருகிறது .மொபைல் பயனாளர்களுக்கு இது ஒரு பயனுள்ள தளமாகும்.இது கீழ் கண்ட நாடுகளின் அடிப்படையில் YOU TUBE வீடியோக்களை தேடுகிறது 

தரவுறக்க  சுட்டி

Thursday, December 12, 2013

NOKIA PHONE இல் மறந்து போன SECURITY CODE இனை கண்டு பிடிப்பது எப்படி?


Nokia Phone இல் நாம் ஏற்கனவே கொடுத்த Security Code, ஒரு சில வேலைகளில் நமக்கு மறந்து போய் இருக்கலாம்.அதை எப்படி கண்டுபிடிப்பது என்று, இன்று பார்ப்போம்.
தேவையானது


01.உங்களுடைய phone இன் Data Cable


02.NSS என்ற மென்பொருள் - இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.இல்லாதவர்கள் இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்









உங்களுடைய Phone பற்றிய விபரங்களை கணினியில் ஒரு இடத்தில் சேமித்து வைத்து இருக்கும் (C:\Program Files\NSS\Backup\pm) அங்கு சென்று





Notepad இனை Open செய்து கொள்ளுங்கள். (Start > Run > Type Notepad)

பிறகு, PM File இனை Notepad இல் Drag and Drop செய்து விடுங்கள்




.

Notepad இல் ஆக கடைசி பகுதிக்கு வாருங்கள்.





அங்கு இருக்கும் 20 இலக்கங்களில் , எது கடைசியில் பத்து Zero களில் முடிகிறது என்று தேடி பாருங்கள் (31323334350000000000)



5=31323334350000000000






அதற்கு பக்கத்தில் இருக்கும் இலக்கங்களை பாருங்கள்.ஒவ்வொரு இலக்கத்துடனனும் 3 என்ற இலக்கம் சேர்ந்தே இருக்கும்.அதை அழித்து விட்டு பாருங்கள்.உங்களுடைய Phone இன் Security Code தெரிய வரும்.

5=31323334350000000000
5=123450000000000



என்னுடைய Phone இன் Security Code 12345 ஆகும்.







குறிப்பு : இதை நான் Nokia 6120c இல் மாத்திரமே செய்து பார்த்தேன்.ஏனைய Phone களில் நான் செய்து பார்க்கவில்லை!, இது உங்களுக்கு கடினமாக இருந்தால் பரவாயில்லை விடுங்கள்.என்னுடைய அடுத்த பதிவில் அனைத்துவிதமான Nokia Phone இற்குறிய Security Code இனை ஓரே நிமிடத்தில் Reset செய்வது எப்படி என்று சொல்லுகிறேன்.(Reset செய்த பிறகு உங்களுடைய Phone இன் Security Code வழமைக்கு திரும்பிவிடும் அதாவது 12345 இற்கு மாறிவிடும்)

Nokia Phone இல் தமிழ் Font இனை Install செய்வது எப்படி?




இதை எப்படி செய்வது என்று இணையத்தில் தேடியபோது கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.ஆனால் இது 100 % Android இல் தமிழ் வேலை செய்வது போல் , வேலை செய்யும் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்.
காரணம் இந்த Tamil Unicode Font சரியாக அதை காட்டுகிறது இல்லை! அதாவது ஒரு எழுத்தோடு இன்னும் ஒரு எழுத்தை நெருக்கி காட்டுகிறது, அது தான் இதில் உள்ள பிரச்சினை..இதை சரி செய்ய, உங்களிடம் வேறு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் அல்லது உங்களிடம் வேறு Tamil Unicode Font இருந்தால் கீழ் உள்ள முறையை பயன்படுத்தி செய்து பாருங்கள்.என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


இது Nokia S60v3 மற்றும் S60v5 ஆகியவற்றில் மட்டுமே வேலை செய்யும். இதை செய்வதற்கு, இங்கு சென்று இந்த Font இனை Download செய்து கொள்ளுங்கள்.


பின் உங்களுடைய Phone இன் Memory Card இனை Computer இல் இனைத்து, Resource என்ற Folder இற்குல் செல்லுங்கள்.

அங்கு , Fonts என்ற ஒரு Folder ஐ உருவாக்குங்கள். அதற்குல், நீங்கள் Download செய்த Font ஐ Copy செய்து Paste கொள்ளுங்கள்.





பின் அதற்குல் இருக்கும் Font இனை Copy செய்து , அதே இடத்தில் 3 முறை Paste செய்யுங்கள்.





அதற்குல் இருக்கும் 4 Font இற்கும், கீழ் உள்ளபடி Rename இனை கொடுங்கள்.


s60snr.ttf
s60ssb.ttf
s60tsb.ttf
S60ZDIGI.ttf







இப்போது...அந்த Memory Card ஐ உங்களுடைய Phone இற்குல் போட்டுவிட்டு, Phone ஐ Restart பண்னுங்கள்..உங்களுடைய Phone இல் , தமிழ் மேலே சொன்னதை போல் தோன்ற ஆரம்பிக்கும்...

உங்கள் MOBILE பற்றிய அனைத்து விபரங்களையும் அறிய






நம்முடைய Mobile பற்றிய விபரம் யாராவது கேட்டால் ஏதோ தெரிந்த 4 அல்லது 5 விஷயங்களை மட்டும் தான் சொல்லுவோம்.அதை பற்றிய முழுவிபரமும் நாம் சொல்ல மாட்டோம்.இன்று உங்களுக்கு ஒரு இணைய தளத்தினை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.இதில் உங்கள் Mobile பற்றி முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.மேலும் இந்த தளத்தில்

01.ஒரு Mobile வாங்க போகும் முன், இந்த விலைக்குல் இந்த இந்த வசதிகளைக்கொண்ட (Camera, GPS, Bluetooth, Radio, Dual SIM , 3.5G Network) Mobile எது என்று கேட்டால் (தேடினால்), உடனே அந்த விலைக்குல் ஏற்ற , அந்த வசதியை கொண்ட, Mobile களை பட்டியல் இட்டு காட்டும்.



02.ஒரு Mobile உடன் இன்னும் ஒரு Mobile ஐ ஒப்பிட்டு பார்க்க முடியும்.


03.ஒரு Mobile ஐ 360 பாகையிலும் சுற்றி பர்வையிட முடியும்.


04.நீங்கள் தேடும் Mobile தற்போது சந்தையில் இருக்கிறதா இல்லியா
என்றும் தெரிந்து கொள்ள முடியும்.


05.நாம் தேடும் Mobile இன் சந்தை பெறுமதியையும் தெரிந்து கொள்ள முடியும்.


மேலும் பல வசதிள் இந்த இணையத்தளத்தில் காணப்படுகிறது.


தள முகவரி http://www.gsmarena.com

நீங்களே ரிங்ரோன் உருவாக்க





நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம்.
ஒலிவடிவத்தை விரும்பியபடி வெட்டி உங்கள் செல்பேசியில் ரிங்ரோனாக பதிய. 

முதலில் இந்த தளத்திற்கு செல்லவும் http://mp3cut.net/
பிறகு Upload mp3 என்றதை அழுத்தி உங்களுக்கு பிடிச்ச பாடலோ அல்லது
ஏதாவது ஒலிவடிவத்தையோ திறந்து கொள்ளவும். 




ஒலிவடிவம் அல்லது பாடல் அங்கு தரவேற்றியதும் உங்களுக்கு
தேவையான அளவை இழுத்து விடவும்... 



அடுத்து Split and Download என்பதை அழுத்தவும். 


நீங்கள் விரும்பிய ஒலிவடிவம் உங்கள் கணணியில் வந்திருக்கும் இடத்தை பார்த்து வையுங்கள்.
பிறகு அந்த ஒலித்துண்டை உங்கள் செல்போனில் ஏற்றி ரிங்ரோனாக மாற்றிக்கொள்ளவும்.