Showing posts with label மடிக்கணினி(Laptop). Show all posts
Showing posts with label மடிக்கணினி(Laptop). Show all posts

Thursday, December 19, 2013

மடிக்கணினியில் தட்டச்சும் போது தொடுபலகையை முடக்க


செல்லுமிடமெல்லாம் எளிதாக எடுத்து செல்லும்படி இருப்பதால் மடிக்கணினிகள் குறிப்பிட தகுந்த அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மேஜை கணினிகள் அளவு உபயோகிப்பதற்கு எளிதாக இருக்கிறதா என்றால், என்னைப் பொறுத்தவரை 'இல்லை' என்பதே பதில்.

மேஜை கணினிகளில் கட கடவென தட்டச்சு செய்வது போன்று மடிக்கணினிகளில் என்னால் விரைவாக தட்டச்ச முடிவதில்லை. மேசைக் கணினிகள் எனக்கு அதிகம் பழக்கப்பட்டு விட்டதால் கூட இருக்கலாம். மடிக்கணினிகளில் தொடுபலகை (Touchpad) மௌஸ் அளவிற்கு எளிமையாக இல்லை.

பெரும்பாலானோர் ஒரு அசௌகரியத்தை மடிக்கணினிகளில் தட்டச்சும் போது அனுபவித்து இருக்க முடியும். தட்டச்சும் போது தவறுதலாக கை விரல்கள் தொடுபலகையில் பட்டு கர்சர் வேறு எங்கோ சென்று நின்று கொள்ளும். அதனை மீண்டும் இழுத்து வந்து, தட்டச்சு செய்ய வேண்டிய இடத்தில் விட்டு மீண்டும் தட்டச்ச வேண்டி இருக்கும்.

இதற்கு தீர்வாக ஒரு இலவச மென்பொருள் கிடைத்து உள்ளது. TouchFreeze.  இது நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் மடிக்கணினியில் தொடுபலகையை முடிக்கி வைத்து விடும். உங்கள் விரல்கள் பட்டாலும் எந்த பாதிப்பும் இராது. நீங்க தட்டச்சுவதை நிறுத்தியதும் சில வினாடிகளில் தொடுபலகை மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும்.


இந்த இலவச மென்பொருளில் அளவு 251KB மட்டுமே. இதனை இந்த சுட்டிக்கு சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது சிஸ்டம் டிரேயில் அமர்ந்து கொண்டு வேலை செய்யும். இது அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் வேலை செய்யும்.

நீங்கள் லினக்ஸ் உபயோகிப்பாளராக இருந்தால் இதே வேலையை செய்ய மென்பொருளை இந்த சுட்டியில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

Tuesday, December 10, 2013

லேப்டாப் battery யின் திறனை அதிகரிக்க


லேப்டாப்
ல battery
தீர்ந்து போச்சா கவலையே படாதிங்க ..நீங்க வெளியூர் போறப்போவோ
இல்ல
முக்கியமா உங்க லேப்டாப் ல எதாவது செஞ்சு கிட்டு இருக்கும் போது
battery
காலி ஆனா டென்ஷன் ஆவாதிங்க laptop battery doubler software
என்னும்
மென்பொருள் மூலமா laptop battery time அதிகரிக்கும் .இதில் உள்ள
முக்கிய
அம்சங்கள் என்னன்னா? battery யின் திறனை இரட்டை மடங்காக்கும்
battery
recharge time அதிகரிக்கும் பயன்படுத்துவதற்கு எளிதானது இன்னும்
பல கீழே
சொடுக்கி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Download

Saturday, December 7, 2013

லேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பத்தை தடுக்க

லேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பத்தை தடுக்க



கடந்த சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும், தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர்.

 சில இடங்களில், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் போன்ற நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை விரைவில் அடைந்ததனால், அவற்றை வாங்கிக் கொண்டு, புதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும் ஏற்பட்டன.
தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இது குறித்து இங்கு காணலாம். மோசமான பேட்டரிகளைத் தவிர்த்து, லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம் அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே, அவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன. ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்து, அதில் கைகளை வைத்துப் பார்த்தால், இந்த வெப்பத்தின் தன்மையை அறியலாம். டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவு. இதனால், அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தை வெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள், சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அமைகின்றன. நெருக்கமாக இருப்பதனால், இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம் வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.

அடுத்த பிரச்னை இயக்க திறன். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல் திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றன. பதியப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்க, இந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாக இயக்குகின்றன. இதனால் அதிக வெப்பம் உருவாகிறது.

லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும். அதனால் தான், வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள், ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்ற முடியவில்லை. விசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால், வெப்பம் வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.

பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாக உள்ளது. எனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும், அதனை குளிரவைப்பதிலும் கவனம் செலுத்தினால், பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.

விசிறிகள் சோதனை: லேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால், உடனே கம்ப்யூட்டரைத் திறந்து, இயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும் சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும். பெரும்பாலும் இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாது. திறந்தால், நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம். இந்த சாப்ட்வேர் புரோகிராம் களை, லேப்டாப் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமே, அதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.

காற்று துளைகளின் சுத்தம்: வெப்பம் வெளியேறுவதற்காக, அமைக்கப்பட்டிருக் கும் காற்று துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால், வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாது. எனவே சுத்தம் செய்வது அவசியம்.

பயாஸ் சோதனை: நம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம், வெப்பம் உருவாவதனை அறியலாம். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம் என்பதற்கு, உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும். சில நிறுவனங்கள், இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டி ருப்பார்கள்.

பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால், வெப்பம் உருவாவதனைத் தடுக்கலாம். வெப்பமான, சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கக்கூடாது. அதே போல, மூடப்பட்ட கார், சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது. ரேடியேட்டர்கள், வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருக்கக்கூடாது. இந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும், நம் தொடைகளின் மீது வைத்து இயக்குவது கூடாது. இதனால், வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும். நம் உடலையும் இந்த வெப்பம் தாக்கும். மெத்தைகள், துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்து இயக்குவதும் தவறு.

இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவென, சிறிய ஸ்டாண்டுகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நல்ல இடைவெளி கிடைப்பதனால், வெப்பம் வெளியேறுவது எளிதாகிறது. இந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.

லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாது. எனவே வெப்பம் எளிதில் விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்க வேண்டும். மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினை வெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம். இந்த வழிகளை மேற்கொண்டால், வெப்பமானது லேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.

மடிக்கணினி(Laptop)

மடிக்கணினி(Laptop)களை பராமரிக்க சுலபமான 8 வழிகள்!

மடிக்கணினி (Laptop) பயன்படுத்துபவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சுலபமான 8 பராமரிப்பு வழிமுறைகள்
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளினால் கணினிகள் என்பது அனை வருக்கும் தவிர்க்க முடியாத சாத னமா க மாறிவிட்டது. ஆனாலும் இன்றைய நாட்களில் மேசைக் கணினிகளை (Desktop Computers) விட மடிக்கணினிகள் (Laptop) தருகின்ற அதிகமான வசதிகளா லும் பாவனைக்கு இலகுவாக அ மைவதனாலும் இப்போது பெரும் பாலான வகை மடிக்கணினி களை மேசைக்கணினிகளின் விலையிலே யே கொள்வனவு செய் ய முடிவதும் அனைவரினதும் மோகமும் மடிக்கணினிகள் நோக்கி திருப்பியிரு க்கிறது. இதனால் இப்போதெல்லாம் வீட்டுக்கொரு மடிக்கணினி என்ற நிலை தோன்றியிருக்கிறது. ஒப் பீட்டளவில் மேசைக் கணினிகளை விட மடிக் கணினிகள் பல வசதிகளை யும் பாவனைக்கு இலகுவாகவும் அமைந் தாலும் ஒரு மடிக்கணினியை நீண்ட காலம் ஒழுங்காக பாவிப்பதற் கும், அது சிக்கலின்றி இயங்குவதற்கு ம் அவற்றை ஒழுங்காக பராமரிக்க வேண்டும்.
ஆனாலும் அவையும்சாதாரண ஒரு கணினி செய்கின்ற வேலை யைதானே செய்கின்றன அவற்றை ஏன் விஷேடமாக பாரமரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலா ம்? அல்லது வெறு மனே தூசு தட்டினால் போதமானது என்று சிலர் நினைக்கலாம் ஆனால் தூசு தட்டுவது மட்டும் ஒரு மடி க்கணினிக்கு பாதுகாப்பை ஏற்படுத்தாது. வன்பொருள் ரீதியாகவும் மென்பொருள் ரீதியாகவும் அவை பாரமரிக்கப்படும் போது மாத்திரமே மடிக்கணினிகள் சிறப் பாக இயங்கும். அவ்வாறு நீங்களும் உங் களுக்கென்று ஒரு மடிக்கணினியை உப யோகிப்பவராக இருந்தால் உங்களுக்கு பயன்படக்கூடிய சில பரா மரிப்பு முறைகளை தொகுத்து தருகின்றேன். அவற்றை பின்பற்றி உங்கள் மடிக்கணினிகளின் பாவனை யையும் செயல்பாட்டையும் வினைத் திற னாக்குங்கள்.
1 தூசுகளிலிருந்து பாதுகாத்து கொள்ளு ங்கள். (Watch out for dust)
எமது சாதாரண மேசைக்கணினிகள் போன்றே மடிக்கணினி களிலும் வெப்ப ம் மற்றும் தூசு போன்றவற்றை வெளியேற்றுவ தற்கான Processor Fan மற்றும் அதற்கான துவாரங்களும் காணப்படும். மடிக் கணினிக ள் தொடர்ந்து பாவிக்கப்பட்டாலும் இந்த துவாரங்களை நாம் கவனி ப்பதில்லை, இதனால் ஏனைய பாகங்களைவிட இந்த துவாரங்கள் அமைந்துள்ள பகுதிகள் மட்டும் தூசி படிந்து காணப் படும்.
இந்நிலை நீடிக்குமானால் காலப்போக் கில் அந்த துவாரங்கள் அடைக்கபட்டு CPU Fan இனால் ஒழுங்காக வெப்பத்தை/தூசிகளை வெளியேற்ற முடியாமல் போவதுடன் அது அதிக வெப்பமான (Over heating) நிலை யை தோற்றுவிக்கும். இத னால் உங்கள் மடிக்கணினி மட்டுமல்ல உங்கள் உடலு க்கும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வாய் ப்பு அதிகம், எனவே உங்கள் மடிகணி னிகளின் வன்பொருள் பாகங்களை வார மொரு முறை சுத்தம் செய் யுங்கள்.
2 குளிர்மையாக வைத்திருங்கள் (Keep it cool)
நீங்கள் அதிகமான நேரம் தொடர்ந்தும் மடிக்கணினியை பாவிப்பவ ராக இருந் தால் மின்விசிறியின் (Fan) அருகிலோ அல்லது குளிரூட்டி பொருத்தப்பட்ட இட த்திலோ நீங்கள் இருந்து உங்கள் மடிக் கணினியை பயன்படுத்துவதுடன் நேரடி யான உங்கள் மடியில் வைத்து அதிக நேரம் மடிக்கணினிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன் அவ் வாறான சூழ்நிலைகளை தவிர்க்க முடியாத போது Lap tray பயன் படுத்துங்கள் அல்லது Cushion போன்ற அமைப்புக்கள் மீது வைத்து பயன்படுத்து ங்கள்.
3 சிறந்த வைரஸ் தடுப்பு மென்பொருளை பாவியுங்கள். (Install a firewall and antivirus software)
உங்கள் கணினியின் இயங்கு முறைமையானது (Operating System) நச்சுநிரல் (Virus) பாதுகாப்பை பெற்றிருக்க வேண்டும். அதிலும் இணையப் பயன்பாடு கொண்ட மடிக்கணினியாக இருந்தால் இந்த ஏற்பாடு அவசியம் செய்யப்பட்டிருக்க வேண் டும். நீங்கள் Apple இன் Mac வகை மடிக் கணி னிகளையோ அல்லது Ubuntu போன்ற இயங் குதளங்களை பயன்படுத்தினால் இந்த கவ லையில்லை. ஆனால் Microsoft இனது எந்த வொரு பதிப்பை (Xp, Vista, 7, 8) பயன்படுத்தினாலும் நிச்சயம் வைரஸ் தடுப்பு மென்பொருள் நிறுவ வேண்டும். சில மடிக்கணினி வகைக ளோடு Original Windows Genuine Windows தொகுப்பு வழங்கப்படும் அவ்வாறான கணி னி கொண்டவர்கள் Microsoft இலவசமாக தருகின்ற Security Essentials மென்பொருளை பயன்படு த்தலாம் அதையே Microsoft பரிந் துரைக்கிறது. அவ்வாறில்லாமல் Pirated Version பயன் படுத்துபவர்கள்ஏதேனும் நல் ல Antivirus (Bit defender, Kaspersky, Avast, AVG, etc…) மென்பொருளை நிறுவுவது சிறந்தது.
4 தேவையில்லாத மென்பொருட்களை நீக்கிவிடுங்கள் (Eliminate unused programs)
நீங்கள் பயன்படுத்துகின்ற மடிக்கணினியை நீங்கள் அதிகமாக எந்த தேவைக்காக பயன்படுத்துகிறீ ர்கள் மற்றும் உங்களுக்கு அவசிய ம் தேவைப்படுகின்ற மென்பொருள் களை மட்டுமே மடிக்கணினிகளில் நிறுவுங்கள், தேவையற்ற செயலிக ளை (Program) நிறுவு வதை தவிர்த் துக் கொள்ளுங்கள். இதன்மூலம் உங்கள் மடிக்கணினியின் செயற் பாட்டு வேகம் அதிகரிக்கப்படுவதுடன் மடிக்கணினி யின் சீரான மற் றும் நெடுநாள் பாவனைக்கும் வழிவகுக்கும். மேலும் தேவையற்ற மென்பொருட்களை தவிர்ப்பது உங்கள் வன்தட்டின் (Hard disk) சேமிப்பளவினை யும் (Storage space) அதிகரிக்கும் இதனா ல் முக்கியமான தரவுகளை அவசர வேளை களில் சேமிக்கவும் முடி யும்.
5 உங்கள் தகவல்களை ஒழுங்காக அடு க்கி வையுங்கள் (Defragment hard drives)
சாதாரணமாக எந்தவிதமான கணினியை பயன்படுத்துபவர்களும் அறிந்திருக்கின்ற விஷயம் என்று நினைக்கி ன்றேன். கணினியை பாராமரிக்கின்ற வழிக ளில் மிக முக்கியமானது. காரணம் நீங்கள் அதிகளவு மென்பொருட்களையும் கோப்புக் களையும் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணினி ஒழுங்காக இயங்குவதற் கும் கணினியின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கவும் இது வழிவகுக்கும். வன்தட்டி ல் அதிகளவு தரவுகள் பதியப்படுகின்ற போது அவை குறித்த ஒழுங்கில்சீராக அடுத்தடுத்து எப்போதும் பதியப்படு வதில்லை, இதனால் இடப்பற்றாகக்குறை, நீங்கள் தரவுகளை மீள ப்பெற முயற்சிக்கின்றபோது அதற்கு அதிக ளவு நேர விரயம் போன்ற பல சிக்கல்க ளும் தோன்றும், இதனை தவிர்க்க வன்தட் டில் குழம்பிக்கிடக்கின்ற தரவுகளை வரி சையாக அடுக்கி சீர்படுத்துகின்ற செயல் முறை தான் Defragment என்று சொல்லப்ப டுகின்றது. இத னை குறைந்தது வாரத்தில் ஒருமுறையாவது செய்வது சிறந்தது. Start- >Allprograms->Accessories->System Tool s->Disk defragment சென்று உங்கள் மடிக்கணினி யையும் ஒழுங்குபடுத்தலாம்.
6 பதிவுகளை தெளிவுபடுத்துங்கள் (Clean your registry)
உங்கள் கணினியில் நீங்கள் எந்தவொரு மென்பொருளையும், கோ ப்புக்களையும் (Files) பயன்படுத்தும்போ தோ அல்லது நிறுவும் போதோ உங்கள் கணினி அநைத செயல்பாடு ஒவ்வொ ன்றுக்குமான பதிவுகளை தன்னுள் சே மத்து (Registry) கொள்கிறது. இவை சீராக எந்தவித பிரச்சினைகளுமின்றி (Corrupt) இருக்கின்றபோது மட்டுமே க ணினியானது சீராக இயங்கும். இந்த Registry Cleanerஇல் ஏற்படும் பிரச்சினைகள் நேரடியாக வெளிக்காட்டப்படுவதில்லை, இவை மறைமுகமான பாதக விளைவுகளை யே ஏற்படுத்தும்,
அதே போல அந்த பிரச்சினைகளை நே ரடியாக சரிசெய்வது சிரமம் இதனால் இதற்கென்று சில Registry Cleaner மென் பொருட்கள் இருக்கின்றன. சிறந்த ஒரு மென்பொருளை நிறுவி உங்கள் கணி னியின் Registryயை சோதித்து கொள்ளுங்கள்.
7 தற்காலிக கோப்புக்களை நீக்கிவிடுங்கள் (Delete temporary internet files)
நீங்கள் இணையப்பக்கங்களில் உலா வருகின்ற போது உங்கள் உலாவிகளா ல் உங்கள் கணினிகளில் சேமிக்கப்படு கின்ற கோப்புக்கள் மற்றும் சில மென் பொருள்களால் தானாகவே உருவாக்க ப்படு கின்ற கோப்புக்களே Temporary Files எனப்படுகின்றன. இவற்றை கிரமமாக (Regular) நீக்குவதன் மூலம் உங்கள் மடி க்கணினியின் செய ல்பாட்டை அதிகரிக்கலாம். Run இல் சென்று %Temp% என தட்டச்சு செய்து Ok அழுத்த கிடைக்கின்ற சாளரத்தில் (Window) உள்ள அனைத்து கோப்புக்க ளையும் தெரிவு செய்து அழித்து விடுங்க ள். ஓரிரண் டு கோப்புக்களை அழிக்க முடியாது, காரணம் அவை உங்கள் இய ங்குமுறைமைக்கான கோப்புக்கள்.
8 மின்கலங்களை பராமரியுங்கள். (Power surge protection)
மடிக்கணினிகளை பொறுத்தவரையில் அதனுடைய மின்கலங்கள் (Battery) மிக முக்கியமானவை. உங்கள் மடிக்கணினி யின் மின்கலத்தை சிறப்பாக பயன்படுத் த பின்வரும் வழிமுறைகளை கைக்கொள்ளுங்கள். எப்போதும் overcharging செய்யாதீர்கள். Battery charge ஆனவுடன் மின் இணைப் பை துண்டியுங்கள். மடிக்கணினியை பா விக்காத வேளைகளில் முக்கியமாக இரவுப் பொழுதுகளில் Charge இல் வை த்துவிடாதீர்கள். மின்னோட்டத்தில் அதிகரிப்பு / குறைவு அடிக்கடி ஏற்படு வதால் அது batteryயை பாதிக்ககூடும். முடியுமானவரை Battery யை முழுமையாக பாவியுங்கள். Battery Low செய்தி கிடைத்த பின் ரே Charge செய்யுங்கள். ஆனால் முக்கியமான நேரங்களில் இது அவசியமில்லை. மேற்சொன்ன இந்த 8 வழிமுறைகளையும் தொ டர்ந்து கைக் கொள்வதன் மூலம் உங்கள் மடிக்கணினியையும் மிகச் சிறப்பாக பயன்படுத்தலா ம். இதில் எந்தவொரு செய்மு றையும் கட்டாயமானது இல்லை . ஆனால் பொதுவாக ஒரு கணினி சீராக இயங்க இவற்றை கைக் கொள்ள வேண்டும். கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளு ங்கள்.