Showing posts with label Internet. Show all posts
Showing posts with label Internet. Show all posts

Sunday, January 5, 2014

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா என்பதை அறிய..


நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.இதற்கு

1. முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இப்போது www.spypig.com  இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.

3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்கள். 

4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)" சொடுக்கி copy செய்யவும்.

5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மெயிலை அனுப்பி விடுங்கள். 

நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

சிறுவர்களுக்கு பாதுகாப்பான இணையத் தேடலை ஏற்படுத்தி தர...



இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.
இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது.

பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன.

இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது.

மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர்களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட.

பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.

இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க நமக்கு K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம் வீடுகளில் பயன்படுத்தும் கணனிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க உதவுகிறது. இதன் மூலம் எப்பொழும் கணனி கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும்.

உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும்.

இதன் சிறப்பம்சங்களாவன:

பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக, இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.

குழந்தைகளின் வயதின் அடிப்படையில், தடுப்பு நிலைகளை அமைக்கலாம். அனைத்து தேடல் சாதனங்களிலும், SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம்.

எப்போதும் அனுமதி மற்றும் எப்போதும் தடை செய்திடு என இருவகைகளாக இணையத்தளங்களைப் பிரித்து அமைக்கலாம். பெற்றோர் அமைத்திடும் பாஸ்வேர்ட் மற்ற பாஸ்வேர்ட்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.

கணனி தொழில் நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட, மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம். தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால், அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம். விண்டோஸ் மட்டுமின்றி, மேக் கணனிகளில் இயங்கும் வகையிலும் இது தரப்படுகிறது.

K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது.

இதனை தரவிறக்கம் செய்து நிறுவச் செய்திடுகையில், லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும்.

இணையதள முகவரி 

Saturday, December 21, 2013

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய


Search your images online with TinEyeஇணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள். உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

Search your images online with TinEyeஇதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதள முகவரி : http://www.tineye.com
/

Friday, December 20, 2013

உங்கள் கணணியில் மென்பொருட்கள் எதுவுமின்றி விரும்பத்தகாத தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க [ Block Any Site In Your Computer ]

 இதற்காக நீங்கள் சிறியதொரு செய்கையை மேற்கொண்டால் போதும்.
முதலில் கீழே காட்டப்பட்ட பாதை ஒழுங்கில் “etc“ என்ற இடம்வரை செல்லவும்.
 
My Computer à C Drive à WINDOWS à system32 à drivers à etc
 C:\WINDOWS\system32\drivers\etc ]
இப்போ “etc“ என்றதில் "HOSTS" எனும் ஒரு கோப்பு [file] காணப்படும்.
இதனை Double Click செய்து அல்லது Right Click செய்தோ ஒரு NotePad இல் திறந்துகொள்ளுங்கள்.
இப்போ இவ் NotePad இன் இறுதியில் "127.0.0.1 localhost" என்பது காணப்படும். இதன் கீழே நீங்கள் தடைசெய்ய விரும்பும் தளத்திற்கான முகவரியை 127.0.0.2என்ற இலக்கத்திற்குப் பின்னால் கொடுக்கவும்.
உதாரணத்திற்கு கீழே பார்க்கவும்.
127.0.0.1 localhost
127.0.0.2 www.blockedsite.com
இவ்வாறே மேலும் பல தளங்களைச் சேர்க்க விரும்பினால் 127.0.0.2 என்ற எண்ணில் உள்ள இறுதி இலக்கத்தை ஒவ்வொன்றாக அதிகரித்து எழுதவேண்டியதுதான்.
உதாரணத்திற்கு கீழே பார்க்கவும்.
127.0.0.1 localhost
127.0.0.2 www.blockedsite01.com
127.0.0.3 
www.blockedsite02.com
127.0.0.4 
www.blockedsite03.com

பின்னர், “Save” என்பதைக் கொடுத்து அவ்NotePad ஐ சேமித்துக்கொள்க.
இனிமேல் உங்கள் கணணியானது விரும்பத்தகாத இணையத்தளங்களுக்கு செல்வதை தடைசெய்யும்.

கூகிள்ளில் தமிழ் மற்றும் பல மொழிகளில் தட்டச்சு செய்ய ஒரு இலவச மென்பொருள்




ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற்ற கீழுள்ள படத்தை காணவும்

டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும் google tamil input

Thursday, December 19, 2013

இலவசமாக கிடைக்கும் டொமைன் நேம் (DOMAIN NAME)


நீங்கள் உங்கள் வலைப்பதிவுக்கு சப் டொமைன் நேம் வைத்திருக்க ஆசைபடுவிர்கள் ஆனால் அதை நாங்கள் பணம் கொடுத்து வாங்கவேண்டும் சிலபேர் பணம் செலவழித்து தங்கள் பெயரில் டொமைன் நேம் வைத்திருப்பார்கள் இதனால் நன்மையும் உண்டு எங்களுடைய சொந்த டொமைன் எனபதால் யாரும் இதை ஒன்றும் செய்யமுடியாது என்ற நம்பிக்கையில் பதிவுகள் எழுதலாம் இலவசமாக கிடைக்கும் டொமைன்களை எப்போதும் அவர்கள் முடக்கி விடுவார்கள் அடுத்து நீங்கள் ஒரு இலவசமாக கிடைத்த டொமைன் நேம்மை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறிர்கள் இந்த டொமைன் நேம்மை வேறொவர் பணம் கொடுத்து வாங்கினால் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது

நான் கிழே கொடுத்திருக்கும் இணையதள முகவரிகள் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் டொமைன் நேம்

FREEDOMAIN.CO.NR CO.CC DOT.TK OFFICELIVE .COM SHORTURL.COM SMARTDOT.COM UNONIC.COM SHIM.NET 321.CN 

Wednesday, December 18, 2013

யூடியூப் வீடியோக்களை தேவையான போர்மட்டில் தரவிறக்க செய்வதற்கு


 
யூடியூப் இணையதளத்தில் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட படங்கள் உள்ளன.

படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறதோ இல்லையோ இதில் முன்கூட்டியே வெளியிடப்படும். இதில் படங்களைப் பார்ப்பவர்கள் பிடித்திருந்தால் தரவிறக்க வேண்டும் என நினைப்பார்கள்.

சிலர் மென்பொருள்களின் மூலமும், சில இணையதளங்களின் மூலமாகவும் படங்களைத் தரவிறக்கம் செய்வார்கள். இதில் படங்கள் FLV என்ற வடிவத்தில் இருக்கும். இதனால் படங்களைத் தரவிறக்கி மறுபடியும் நமக்குப் பிடித்த வடிவத்திற்கு மாற்றுவோம்.

வேறு எந்த மென்பொருளின் துணையின்றியும் வேறு இணையதளத்திற்குச் செல்லாமலும் பயர்பொக்ஸ் உலவியில் ஒரு நீட்சியைச் சேர்ப்பதன் மூலம் எளிதாக யூடியூப் படங்களைத் தரவிறக்க முடியும். இந்த நீட்சியின் பெயர் Easy Youtube Video Downloader.

இதில் உள்ள சிறப்பு வசதி என்னவென்றால் பார்த்துக் கொண்டிருக்கிற படம் பிடித்திருந்தால் நேரடியாக படத்திற்கு கீழேயே தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் வேண்டிய வகையைத் தேர்வு செய்து தரவிறக்கலாம்.

Mp3, Mp4, FLV மற்றும் யூடியூபின் புதிய வசதியான High Definition வகையிலும் தரவிறக்க முடியும். சில படங்கள் HD யில் இல்லாமல் இருக்கும். அவற்றிற்கு கிழே HD என்ற வசதி மட்டும் இருக்காது.

பின்னர் பயர்பொக்ஸ் உலவியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து விட்டு யூடியூப் தளத்திற்குச் சென்று எதாவது ஒரு படத்தைக் கிளிக் செய்து பாருங்கள். வீடியோவிற்குக் கிழே Download as என்ற மெனு புதியதாக இருக்கும். அதில் வேண்டிய வடிவத்தைத் தேர்வு செய்தால் படம் உங்கள் கணணிக்கு எளிதாக தரவிறக்கப்படும்.

குரோம் உலவிக்கும் இந்த நீட்சி தரப்பட்டுள்ளது.

பேஸ்புக் நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்டறிவதற்கு


 
நாம் பேஸ்புக்கில் பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து பேச விரும்பினால் இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம்.

ஆனால் பேஸ்புக்கில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை பேஸ்புக் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது? இதற்கு ஸ்கைப்பிலே வசதி உள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது ஸ்கைபிலே சென்று contacts ->import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் ஒரு விண்டோ தோன்றும்.

அதில் உங்கள் பேஸ்புக்கின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள்.

சற்று நேரத்திலே உங்கள் பேஸ்புக் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும்.

Tuesday, December 17, 2013

இணைய தளம் மூலமாக sms அனுப்பும் தளம்...



www.way2sms.com
www.160by2.com
www.fullonsms.com
www.net2mobile.com
www.ibibi.com
www.youmint.com
www.smsgupshup.com
www.afreesms.net

இந்த இணையதளத்தி இலவசமாக sms அனுப்புவதற்கு பயன்பாடுத்திகொள்ளுகள்.

Thursday, December 12, 2013

சரியான முறையில் மின்னஞ்சல் (E-MAIL) அனுப்புவது எப்படி?



நண்பர்கள் சிலர் அனுப்பும் மெயில்களை திறந்து பார்த்தால் ஒரு பெரிய நியூஸ்பேப்பர் அளவுக்கு அவர்கள் யாருக்கெல்லாம் அந்த மெயில் அனுப்பி உள்ளனர் என்று இருக்கும்.அதை எல்லாம் தாண்டி வந்து படிப்பதற்குள்  போதும் போதும் என ஆகி விடும். இதை தவிர்த்து நீங்கள் யாருக்கெல்லாம் அனுப்பி உள்ளீர்கள் என்பதை  எப்படி மறைப்பது என இந்த பதிவில் காணலாம்.
நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் ஐ‌டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc.
சரி இவற்றை எப்படி பயன்படுத்துவது??
Cc: Carbon Copy
நாம் எப்போது ஒரு மெயிலை இரு வேறு நபர்களுக்கு ஒரே வேலைக்கு அனுப்ப  நினைக்கிறோமோ அப்போது இதனை பயன்படுத்தலாம். To field இல் முதல் நபர் ID யும், Cc யில் மற்றவர்கள் மெயில் ID யும் இதற்கு டைப் செய்ய வேண்டும். Cc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.
இந்த மெயிலை படிப்பவர் To, Cc என இரு Field லும் உள்ள மெயில் ID க்களை காண இயலும். இது எந்த இடத்தில் பயன்படும் என்றால், உங்கள் மேலதிகாரிக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் அதையே வேறு சிலருக்கும் அனுப்ப வேண்டும் என்றால் To வில் மேலதிகாரி ஐ‌டி , Cc யில் மற்றவர் ஐ‌டி. இதற்கும் To field க்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
உதாரணம்:

Bcc: Blind Carbon Copy
நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது Bcc யில் அனுப்ப வேண்டிய நபர்களின் பெயரை கொடுத்து இருந்தால் யார் படிக்கிறாரோ அவர் ID யும் மட்டுமே தெரியும். அநாவசியமான மற்றவர்கள் ID அவர்களுக்கு தெரியாது. இது பாதுகாப்பானதும் கூட.  இது Newsletter, மற்றும் பலருக்கு அனுப்பும் போது பயன்படும். Bcc யில் ஒரு மெயில் ID க்கு மேல் டைப் செய்ய வேண்டி இருந்தால் ஒவ்வொன்றுக்கும் இடையில் கமா போடவும்.
உதாரணம்:

 மேலே உள்ள Cc படத்தில்  போல எல்லா மெயில் ID  க்கும் தான் அனுப்பினேன். ஆனால் ஒன்று மட்டும் Bcc யில் உள்ளதை கவனிக்கவும்.
 Bcc பயன்படுத்தும் போது To வில் கட்டாயமாக எதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 
இப்போது தன்னுடைய புதிய பதிவுகளை விளம்பரப்படுத்த நிறைய நண்பர்கள் இந்த வேலையை செய்கிறார்கள். மெயில் அனுப்புவது சரி. இப்படி ஒரேடியாய் எல்லோரையும் To வில் மட்டும் போட்டு அனுப்புவது தவறு. இதன் மூலம் நிறைய Spam மெயில்கள் வருகின்றன.

IP எண்ணை வைத்து, கணனியை உபயோகிப்பவர்களின் விபரங்களை அறிய.....!!--கணிணிக்குறிப்புக்கள்



ஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள், அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம்.



விவரங்களை அறிய
1. முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

2. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் நேரடியாக உபயோகிக்கிலாம். உங்கள் கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.
3. இந்த மென்பொருளை ஓபன் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

4. இது போல் உங்கள் IP எண்ணை கொடுத்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.

5. அவ்வளவு தான் இனி நீங்கள் கொடுத்த IP எண்ணின் அனைத்து விவரங்களும் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

6. இது போல தங்களுக்கு நீங்கள் கொடுத்த IP யின் மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

7. ஒருவேளை தங்களுக்கு உங்கள் கணினியின் IP எண் தெரியவில்லை எனில் கவலை வேண்டாம். இந்த மென்பொருளில் HELP மெனுவில் சென்று அங்கு உள்ள Show my current Ip address கிளிக் செய்தால் உங்கள் கணனி இணையத்தோடு இணைக்கப்பட்டு உங்கள் IP நம்பர் கிடைக்கும்.

8. அந்த எண்ணை காப்பி செய்து கொண்டு இந்த மென்பொருளில் பேஸ்ட் செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. இனி நமக்கு வரும் மெயிலில் உள்ள IP யை வைத்தே அந்த மெயில் அனுப்பியவரின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க



குறிப்பு :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் கூடாது.நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.


1 .URL இக்கு பதிலாக IP address ஐ பயன்படுத்தல்


ஒவ்வொரு இணையதளமும் தனது URL அதாவது Domain name இற்கு சமமான IP address ஐ கொண்டிருக்கும். உதாரணமாக http://www.anbuthil.com/ என்ற URL இற்கு சமமாக 216.239.38.21 என்ற IP address ஐ கொண்டுள்ளது.இது போல் உங்களுக்கு தேவையான மற்ற இணைய தளங்களின் IP address ஐ கண்டு பிடிக்க http://www.ip-adress.com/reverse_ip என்ற தளம் பயனுள்ளதாக இருக்கும்.

2 .Google Cache ஐ பயன்படுத்தல்


நீங்கள் Google போன்ற search engines களை பயன்படுத்தி குறித்த இணையதளத்தை தேடும் பொது தேடல் முடிவுகள் கிடைக்கும்.அந்த குறிப்பிட உங்களுக்கு தேவையான search result இன் கீழ் பார்த்தீர்கள் என்றால்"Cache " என்ற ஒரு சொல் (லிங்க்) இருக்கும் அதனை நீங்கள் அழுத்தும் பொது உங்களுக்கு தேவையான குறித்த தடை செய்யப்பட்ட இணைய தளத்துக்கு செல்ல முடியும்.


3 .e -mail இல் பெறுதல்


web2mail என்ற ஒரு இலவச சேவை வழங்கும் தளம் ஒன்று உள்ளது. நீங்கள் இந்த தளத்தின் மின்னஞ்சல் முகவரியான www@web2mail.com இக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் subject title ஆக உங்களுக்கு தேவையான தளத்தின் URLஐ இட்டு.இது நீங்கள் அனுப்பிய தள முகவரியின் web page இனை உங்கள் மினஞ்சல் Inbox இற் கு அனுப்பி வைக்கும்.


4 .Proxy Websites இனை பயன்படுத்தல்


இது தான் பலரால் பயன்படுத்தப்படும் பிரபல முறை.இப்படியான தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.இத்தளங்களுக்கு சென்று தடை செய்யப்பட்ட உங்களுக்கு வேண்டிய இணையதள முகவரியை கொடுத்தால் குறித்த தளத்துக்கு செல்ல கூடியதாக இருக்கும். மிக பிரபலமான இப்படியான சேவை வழங்கும் ஒரு தளம்http://www.hidemyass.com ஆகும்.


5 .Short URL முறையை கையாளல்


பெரிய URL களை சுருக்கி தரும் சேவையை வழங்கும் சில தளங்கள் உள்ளன. இப்படியான ஒரு தளத்துக்கு சென்று உங்களுக்கு தேவையான முகவரியை வழங்கி சுருக்கப்பட்ட முகவரியை பெற்று அதற்கு செல்வதன் மூலம் தடை செய்யப்பட்ட தளத்துக்கு செல்ல முடியும்.இப்படியான URL சுருக்கல் சேவை வழங்கும் பிரபல தளம் http://bit.ly இனை நீங்கள் பாவிக்கலாம்.



6 .Screen-Resolution.com


இந்த தளம் different resolution இல் உள்ள எந்த தளத்தையும் பார்வையிட உதவு கின்றது. அதுமட்டுமல்லாமல் மிகவும் சுவாரசியமான பயனுள்ள ஒரு தளம். இங்கு சென்றால் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் செல்ல உதவும்.


7 .Google Mobile Search


http://www.google.com/gwt/n என்ற இந்த தளம் குறித்த ஒரு இணைய தளத்தை செல் போன் இல் பார்த்தால் எப்படி இருக்கும் என பார்க்க உதவும் ஒரு தளமாகும். இத்தளத்துக்கு சென்றும் நீங்கள் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் போகலாம்.

Tuesday, December 10, 2013

உலகின் மோசமான பாஸ்வேர்ட்கள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக இ-மெயில் பயன்படுத்துபவர்கள் தங்களது கணக்குகளை பயன்படுத்த பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச் சொற்களைப் பயன்படுத்துவது அவசியம்.
இந்த பாஸ்வேர்ட்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்கள் என்ன என்று ஆராயப்பட்டது.
இதில் `123456′ என்ற எண்கள் தான் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாஸ்வேர்ட் என்ற பெயரே அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் தங்களது முதல் பெயர் மற்றும் ஒரே சொல்லை பலமுறை பயன்படுத்துவது ஆகியவையும் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்துகின்றனர்.
`பாண்ட்007′, `கோகோகோலா’ போன்ற சொற்கள் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
முதல் 10 இடங்களில் உள்ள பாஸ்வேர்ட்களை ஒன்பதில் ஒருவரும், முதல் இருபது இடங்களில் உள்ள பாஸ்வேர்ட் பட்டியலில் உள்ளவற்றை 50ல் ஒருவரும் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஒரு நபர் அதிக பட்சமாக 15 பாஸ்வேர்ட்கள் வரை நினைவில் வைத்துக் கொள்கின்றனர் என்றும், 61 சதவிகிதம் பேர் பல்வேறு கணக்குகளுக்கும் ஒரே பாஸ்வேர்ட்டை வைத்துக் கொள்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

இணையத்தில் கிடைக்கும் இலவச சேவைகள்


எந்தவொரு சுருக்கக் குறியீட்டின் விரிவாக்கத்தை அறிவதற்கு
acronymfinder என்ற இணையம் உதவுகிறது
உதாரணமாக XML என தேடினால் eXtensible Markup Language என சட்டென்று விடை கிடைக்கும்
தள முகவரி : http://www.acronymfinder.com/
விண்டோஸ் நுட்பங்கள் அறிய...
பெரும்பாலான கணணிப் பயனாளர்கள் Windows இயக்க முறையையே பயன்படுத்துகிறார்கள் விண்டோஸ் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு அவற்றுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் விண்டோஸ் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கு.
தள முகவரி : http://windowssecrets.com/
பீட்டா பதிப்புகளை அறிய…
எந்தவொரு மென்பொருளானாலும் அதனை எந்தவொரு நிறுவனமும் உடன சந்தைக்கு அனுப்பாது முதற்கட்டமாக வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டுக்காக முழுமை செய்யப்படாத பதிப்பான Beta பதிப்பையே வெளிவிடுகிறது. இவ்வாறன பதிப்புக்களை அறிந்து கொள்வதற்கு.
தள முகவரி : http://www.betanews.com/
இணைய மொழிகளைக் கற்றுக் கொள்ள...
HTML, XHTML, XML, PHP, WML, CSS, ASP போன்ற இணைய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு மிக சிறந்த தளம்
தள முகவரி :http://www.w3schools.com/
தமிழ் – ஆங்கிலம், தமிழ் – ஜேர்மன், ஜேர்மன் – தமிழ் அகராதி
ஆங்கில சொற்களுக்கு தமிழ் கருத்துக்களும், தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலம், ஜேர்மன் கருத்துக்களும், ஜேர்மன் சொற்களுக்கு தமிழ்க் கருத்துக்கள் கூறும் பேரகராதி. சுமார் 17357 சொற்தொடர்கள், பழமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தள முகவரி : http://www.tamildict.com/
தொழில்நுட்ப உதவிகளுக்கு…
கணணியை பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் கேள்விகளைக் கேட்டு திருத்தமான பதில்களை பெற்று அவ்வாறான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும்
தள முகவரி :http://techguy.org/

Monday, December 9, 2013

பயர்பாக்சில் இணைய வேகத்தை அதிகரிக்க Firefox Booster


நாம் வலை உலவிகளைக் கொண்டு தான் இணையத்தைப் பயன்படுத்துகிறோம். வலை உலவிகளின் போட்டியில் Firefox மற்றும் Chrome ஆகிய இரண்டுமே முண்ணணியில் உள்ளன. நமது இண்டர்நெட் இணைப்பு நன்றாக இருந்தும் சில நேரம் வலை உலவிகளில் இணையப்பக்கங்கள் மெதுவாக தோன்றச்செய்யும்.ஏன் இப்படி மெதுவாக டவுன்லோடு ஆகின்றன என்று நமக்கும் தெரியாது.

இண்டர்நெட் இணைப்பு நல்லதாக பெற்றிருந்தாலும் இணையதளங்கள் மித வேகத்தில் வருவதற்கு காரணம் இணைப்புக்கேற்றவாறு வலை உலவிகளின் அமைப்புகளை மாற்றாமல் இருப்பதே ஆகும். ஒவ்வொரு வலை உலவிகளுக்கும் தனித்தனியே அமைப்புகள் (Configurations) உள்ளடங்கியிருக்கும். இதை நாம் அறிவதில்லை. உதாரணமாக Firefox ன் அமைப்புகளைப் பார்க்க இணைய முகவரி அடிக்குமிடத்தில் About:config என்று தட்டச்சிட்டால் பயர்பாக்ஸ் வலை உலவியின் முக்கிய அமைப்புகள் நமக்குத்தெரியும்.

இவைகளை நமது இணைப்பிற்கு ஏற்றவாறு மாற்றும் போது வலை உலவியும் புரிந்து கொண்டு வேகத்தை அதிகப்படுத்தும். ஆனால் நாம் தெரியாமல் எதாவது ஒன்றின் மதிப்பை மாற்றிவிட்டால் சிக்கலாகிவிடும். அதனால் இதற்கென இருக்கும் மென்பொருள் தான் Firefox Booster.


இந்த மென்பொருளில் நாம் வைத்திருக்கும் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை குறிப்பிட்டால் போதும். நமது இணைப்பிற்கு ஏற்றவாறு பயர்பாக்ஸ் உலவியை தயார்படுத்தும்.எந்த வகையான இணைப்பு மற்றும் இணைப்பின் வேகம் போன்றவற்றை வைத்து இந்த மென்பொருள் செயல்படுகிறது.

இந்த மென்பொருளை செயல்படுத்தும் போது முக்கியமாக Firefox வலை உலவியை மூடியிருக்க வேண்டும். இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானது.

தரவிறக்க முகவரி
: Download Firefox Booster

இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்றும்

இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்றும்

உலகின் பிரபலமான நாட்களிலும், அறிஞர்களின் விசேஷ நாட்களிலும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து அவர்களுக்கு சமர்பிக்கும். இது Doodles என்று அழைக்கப்படுகிறது. இன்று கூட நீங்கள் கூகுளின் லோகோவை பார்த்தால்  மேரி கியூரியின் 144 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாற்றி அமைத்து உள்ளது. இந்த வரிசையில் தற்பொழுது இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து உங்களுக்கு வாழ்த்து சொல்லும்.
இனி உங்களின் பிறந்த நாளுக்கு கூகுளை ஓபன் செய்தால் கூகுளின் லோகோ மாறி இருக்கும் அதன் மீது உங்கள் கர்சரை நகர்த்தினால் Happy Birthday .... என்ற வாழ்த்தும் வரும். 


இது போன்ற லோகோ மாற்றத்திற்கு நீங்கள் இரு விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். 

1. உங்களின் கூகுள் புரொபைலில் பிறந்த நாள் விவரங்களை கொடுத்து இருக்கவேண்டும். கொடுக்காதவர்கள் இங்கு சென்று கொடுக்கவும். 

2. பிறந்த நாளின் போது நீங்கள் கூகுள் லோகோவை பார்க்கும் முன் கூகுள் அக்கௌண்டில் லாகின் ஆகி இருப்பது அவசியம். 

கூகுளின் இந்த அறிவிப்பை காண - googleblog

வாசகர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் தருவதால் தான் கூகுள் எப்பொழுதும் நம்பர் 1 நிலையிலேயே உள்ளது.

Sunday, December 8, 2013

ஆன்லைனில் கண்களின் பார்வை திறனை இலவசமாக பரிசோதிக்க

ஆன்லைனில் கண்களின் பார்வை திறனை இலவசமாக பரிசோதிக்க

எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் புற்றீசல் போல உருவாகின்றன. இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணினி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஆன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம் என இங்கு பார்க்கலாம்.

கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடித்து ஆன்லைன் பரி சோதிப்போம் வாருங்கள்.

  • உங்கள் கணினி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும். 
  • உங்கள் கணினியில் Flash Player இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். 
  • அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடை பிடிக்கவேண்டிய வழிமுறைகள் கொடுக்க பட்டிருக்கும். 
  • அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு பகுதி தெரியும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்து உங்கள் கணினி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் கணினி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும். 
  • அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.
  • ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த சோதனை 100% துல்லியமானது அல்ல கண்களில் திறனில் ஏதேனும் பிரச்சினை இருப்பது போல உணர்ந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுவதே சாலச்சிறந்தது.

கணினியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள்

கணினியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள்

உலகில் கோடிக்கணக்கான கம்ப்யுட்டர் இருந்தாலும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு குறியீடு எண் கொடுத்து பிரித்து வைத்துள்ளனர். இதுவே ஐ.பி எண்(Internet Protocol) என அழைக்கபடுகிறது. இந்த ஐ.பி. எண்ணை வைத்து ஒரு கணினியின் இருப்பிடத்தையும், தகவல் பரிமாற்றங்களையும் சரியாக கூற முடியும். இது மட்டுமில்லாமல் ஹாக்கர்கள் கணினியின் ஐபி எண்ணை அடிப்படையாக கொண்டே கணினியை முடக்குகின்றனர்.  (ஆகையால் உங்கள் கணினியின் ஐபி எண்ணை யாரிடமும் பகிந்து கொள்ள வேண்டாம்). கணினியின் ஐ.பி. எண்  சுலபமாக கண்டறிய சிறந்த 10 தளங்கள் கீழே கொடுத்துள்ளேன். இந்த ஐபி எண்களை நாம் ஆப்லைனிலும் பார்த்து கொள்ளலாம். 
இந்த தளங்களில் ஐபி எண் மட்டுமில்லாமல் உங்களின் இணைய வழங்குனர், மற்றும் நீங்கள் இருக்கும் இருப்பிடம் போன்ற சில விவரங்களும் வரும்.

1) What is my ip address
இந்த தளம் ஐபி எண்ணை கண்டறிய மிகவும் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் ஐபி எண் மட்டுமின்றி சில கூடுதல் விவரங்களும் வருகிறது. அது மட்டுமில்லாமல் நம் கணினியின் இருப்பிடத்தை கூகுள் மேப் உதவியுடன் காட்டுகிறது.

இந்த தளத்தில் நம்முடைய கணினியின் ஐ.பி எண் மட்டும் காட்டுகிறது. மற்றும் ஐ.பி. எண்ணை பற்றிய ஒரு விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் அங்கு கொடுத்துள்ளனர். தேவை படுபவர்கள் அதை படித்து ஐபி எண்ணை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த தளத்தில் உங்கள் ஐபி எண்ணோடு உங்கள் இணையதளத்தில் இணைக்க விட்ஜெட் கோடிங்கையும் கொடுத்துள்ளனர். 

மற்ற தளங்களில் நாம் சென்றாலே நம் கணினியின் ஐ.பி. எண்ணை கண்டறிந்து விடலாம். ஆனால் இந்த தளத்தில் சில குறியீடு எண்ணை கொடுத்து Show my IP என்ற பட்டனை அழுத்தினால் தான் நம்முடைய கணினியின் ஐ.பி. எண்ணை கண்டறிய முடியும்.

இந்த தளத்தில் நம் கணினியின் ஐ.பி. எண் மட்டுமின்றி நம்முடைய கணினியில் உபயோகிக்கும் உலவிகள் அதன் வெர்சன்கள் போன்ற விவரங்களும் வருகிறது. 

இந்த தளத்தில் நமது ஐபி எண்ணும் மற்றும் அதனோடு நாம் உபயோகிக்கும் கணினியின் இயங்கு தளம் (Operating System), நாம் உபயோகிக்கும் உலவி(Browser) போன்ற விவரங்களும் வருகின்றன. மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக நம் இணைய வேகத்தையும் அறிந்து கொள்ளலாம். 

இந்த தளத்திலும் நம் கணினியின் ஐபி எண்ணை கண்டறியலாம். 

இந்த தளத்தில் நமது ஐபி எண்ணும் மற்றும் அதனோடு நாம் உபயோகிக்கும் கணினியின் இயங்கு தளம் (Operating System), நாம் உபயோகிக்கும் உலவி(Browser) போன்ற விவரங்களும் வருகின்றன. மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக நம் இணைய வேகத்தையும் அறிந்து கொள்ளலாம். இன்னும் சில விவரங்களும் இதில் கிடைக்கிறது. 

இந்த தளத்தில் நம் ஐபி எண்ணோடு கூடுதல் வசதியாக நம் ஐபி எண்ணை மறைத்து இணையத்தில் உலவும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தளத்திலும் நம் ஐபி எண்ணும் அதன் இருப்பிடத்தை கூகுள் வரைபடம் கொண்டும் காட்டியுள்ளனர்.

ஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறிந்து கொள்ள

ஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறிந்து கொள்ள

நாம் இணையத்தில் உலாவரும் போது நம் கணினியின் வேகத்திற்கு ஏற்ப நமக்கு இணைய பக்கங்கள் திறக்கும். மற்றும் நாம் இணையத்தில் இருந்து எதை டவுன்லோட் செய்தாலும் அல்லது நாம் இணையத்தில் அப்லோட் செய்தாலோ அனைத்தும் நம் கணினியின் இணைய வேகத்தை பொறுத்தே செயல் படும். ஆகவே ஆன்லைனில் நம்  கணினியின் இணைய வேகத்தை எப்படி எளிதாக அறிந்து கொள்ளவது என்று இங்கே காணலாம். இதற்க்கு நிறைய தளங்கள் உள்ளன இன்று நாம் பார்க்க போகு தளம் சிறந்ததாக உள்ளது.
இந்த தளத்திற்கான லிங்க் கீழே உள்ளது. இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில் அங்கு கொடுக்கப்பட்டுள்ள Start Speed Test என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே போதும் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
  • முதலில் கணினியின் டவுன்லோட் செய்யும் வேகம் என்பதை கணக்கிட்டு முடிவை தெரிவிக்கும்.
  • அடுத்து கணினியின் அப்லோட் செய்யும் வேகத்தின் திறனை தெரிவிக்கும். 
  • முடிவின் உங்கள் கணினியின் PING (packet Internet Gropping) அளவை பரிசோதிக்கும்.
  • முடிவின் உங்கள் கணினியின் IP முகவரி மற்றும் நீங்கள் உபயோகிக்கும் பிராட்பேன்டின் நிறுவனத்தின் பெயர் ஆகிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கும்.
  • உங்கள் கணினியின் இணைய வேகத்திற்கு ஏற்ப உங்களுக்கு முடிவு வரும். 
  • இதில் உங்கள் முடிவிற்கான லிங்கும் கொடுத்து உள்ளனர்.
  • மேலே உள்ளது என் தளத்திற்கான முடிவு. 
  • இந்த தளத்திற்கு Check Your Internet Speed இந்த லிங்கில் செல்லவும்.